பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிகு திருமுறை சர்லாறு

அருகேயிருந்த புத்தகுரு மிகவும் வெகுண்டான். திரி பிடகத்தை யருளிய புத்ததேவனகிய எங்கள் தலைவனே யன்றி வேருெரு தெய்வமுண்டோ? உண்டாவின் தில்லையை யடைந்து அங்குள்ளவர்களை வாதில்வென்று பொன்னம் பலத்தைப் போதிநீழற் பெருமானுக்குரிய புத்தவிகாரமாக மாற்றுவேன் ’ எனச் சூளுரைத்துப் புத்தர்குழுவுடன் புறப் பட்டான். ஈழமன்னனும் ஊமையாகிய தன்மகளை அழைத்துக்கொண்டு தில்லைப் பதியை யடைந்தான்.

முன்னமே சென்ற புத்தகுரு, சிதம்பரத்தையடைந்து திருப்புவீச்சரத் திருக்கோயிலிலே தங்கியிருந்தான். புறச் சமயத்தாளுகிய அவனைக் கண்ட நகரமக்கள் தில்லை யெல்லையை விட்டு அகல்க எனக் கடிந்துரைத்தார்கள். யான் சோழமன்னனுக்கெதிரில் நுமது சைவசமயம் மெய்ச் சமயம் அன்று எனத்தெளிவித்து எங்கள் புத்ததேவனே தெய்வம் என நிலைநிறுத்தியன்றி இவ்விடத்தை விட்டு அகலேன் எனப் புத்தகுரு கூறிஞன். இதனைக்கேட்டோர் இச்செய்தியைத் தில்லைமூவாயிரவர்க்குத் தெரிவித்தார்கள். அவர்கள் அங்குவந்து புத்தகுருவை நோக்கி நீ இவ்வாறு செய்வது என் எனவினவக் கேட்ட புத்தகுரு நீங்கள் வேதசாத்திர அளவைகளைக் கொண்டு நுமது தெய்வமே தெய்வமென்று நிலைநாட்டுவீராயின், யான் அதனை மறுத்துப் புத்தனே கடவுள் என நிலைநிறுத்துவேன்’ என்ருன். புத்தனை வாதில்வென்று போக்குதலே முறையென உணர்ந்த தில்லைவாழந்தணர்கள். சோழமன்னனுக்குத் திருமுகம் எழுதியனுப்பி அருந்தவ முனிவர்கனாகிய சிவனடியார்களுக்கும் ஒலையெழுதியனுப்பினர்கள். இரவுப் பொழுதெய்திய அளவில் தில்லை நகர மக்கள் அனே வரும் தத்தம் மனையிற் சென்று துயில் கொண்டனர். அன்றிரவு வைகறைப்பொழுதிலே தில்லைப்பெருமான் சடை முடியும் முழுநீறு பூசிய திருமேனியும் உடையராய்க் கையிற் பிரம்பு தாங்கித் தில்லைநகர மக்களது கனவிலே தோன்றி நீவிர் வருந்துதலொழிமின், நம்முடைய ஊரெல்லையில் வாதவூரன் வந்து தங்கியிருக்கிருன். அவன் இம்மொழியைக் கேட்ட போதே விரைந்து வந்து தர்க்க சாத்திர முறைக்குப் பொருத்தமான வகையில் புத்தர்களை வாதில் வெல்வான், தவப்பயனுடைய நீங்கள் அவனை அழைப்பீராக’ எனப் பணித்து மறைந்தருளினர்.