பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

பன்னிரு திருமுறை வரலாறு


பட்டதாதலும் கூடும். இதனைக் காரைக்காலம்மையார் பாடினரெனத் துணிந்து கூறுவதற்கு அம்மையார் வர லாற்றில் எத்தகைய சான்றுமில்லை.

3. ஐயடிகள் காடவர்கோன் நாயனுர்,

பதினெராந் திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகத் தொகுக்கப்பெற்றுள்ள கூேடித்திரத் திருவெண்பாவை அருளிச் செய்தவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனராவர். இவரை ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்” எனத் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரர் போற் றிப் பரவியுள்ளார்.

உலகிற் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்திலே ஐயடிகள் தோன்றினர். நாட்டில் வறுமையும் பகையும் தோன்றிக் குடிமக்களை வருக்தா வண்ணம் சிவனடித் தொண்டு பூண் டொழுகும் நீதிநெறியினை மேற்கொண்டு செவ்விய முறையில் ஆட்சி புரிந்தார். எங்கும் திருத்தக விற்ருகிய செல்வப் பொலிவுடன் புகழ் வளரவும் எல்லாவு யிர்களும் பெருமைக்குக் காரணமாகிய நற்பண்புகளுடன் இன்புற்று வாழவும் பகைப்புலமாகிற பிற நாடுகளையும் வென்று அடிப்படுத்து இவ்வுலகில் அறநெறியும் அருள் நெறியாகிய சைவத் திருநெறியும் அருமறையின் துறை களும் விளக்கமுற அரசியலை நிகழ்த்துவாராயினர். மன்ன செலாம் தம் ஆணை வழி நின்று பணிபுரியவும் வடநூல் தென்றமிழ் முதலாகிய கலைத்தொண்டு நிகழவும் குடிமக் களே நன்முறையிற் பேணிக்காத்த இவ்வேந்தர் பிரானுர், தம்ப லமைந்த அரசுரிமையாகிய ஆட்சிக் கடமை தாம் மேற்கொண்டுல எ சிவத்தொண்டிற்குத் தடையாய்த் துன்பம் விளை ப்பதெனக் கருதி, அரசுரிமையைத் தம் அருமைப் புதல்வன் பால் ஒப்படைத்து விட்டுச் சிவநெறித் திருத்தொண்டினையே விரும்பி மேற்கொள்வாராயினர். தொண்டுரிமை பூண்ட இவ்வேந்தர் அண்டர் பிரானுகிய சிவபெருமான் அமர்ந்தருளுந் திருக்கோயில்களைக் கண்டு வணங்கித் திருத்தொண்டு செய்து ஒவ்வொரு திருத்தலங் க ையும் ஒவ்வொரு வெண் பாவினுற் பாடிப் போற்றும் பேரார்வமுடையராய்ப் பெரும்பற்றப் புலியூராகிய தில் லேயை யடைந்தார். திருச்சிற்றம்பலமாகிய ஞான வெளி