பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் 547

வாழ்ந்து பணி செய்தவராதலின் அப்பெருந்தசையாரை அரசனும் குடிமக்களும் ஐயடிகள் என மதித் துப் போற்றி ஞர்களென்பதும், கழற்சிங்கன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நம்பியாரூரர் இப்பெயர் வழக்கத்தை நன்கறிந்தவராதலின் ஐயடிகள் காடவர்கோன் என அவரைத் திருத்தொண்டத் தொகையிற் சிறப்பித்தருளினரென பதும் ஈண்டு உய்த் துணரத் தக்கனவாகும்.

இராசசிம்ம பல்லவனுடைய தந்தையாகிய பரமேசுர வர்மன், இரண்டாம் மகேந்திரனுடைய மகனுவன். இவன் கி. பி. 670 முதல் 685 வரை ஆட்சிபுரிந்தானென்பர். இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் புலிகேசியின் மைந்தன கிய விக்கிரமாதித்தன் என்னும் சளுக்க வேந்தன் காஞ்சியின்மேற் படையெடுத்துச் சென்று பல்லவனே வென்று காஞ்சியைக் கைப்பற்றிச் சோழ நாட்டையும் கைக்கொண்டு காவிரிக்குத் தென்கரையிலுள்ள உரக புரத்தில் (உறையூரில்) தங்கியிருந்த செய்தி அவன் அளித்த கத்வால் சாசனத்தால் அறியப்படும். இங்கனம் சோழ நாட்டிற் புகுந்த விக்கிரமாதித்தன், பாண்டி நாட்டையும் கைப்பற்றக் கருதிப் போருக்கு எழுந்த பொழுது பாண்டியன் நெடுமாறன் மகளுன கோச் சடை யன் என்பான் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள மருதூரில் விக்கிரமாதித் தனது சேனையைத் தேக்கி மங்கல புரத்தில் அவனை வென்றமையால் இரணதீசன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ருன் என்ற செய்தி வேள் விக்குடிச் செப்பேட்டிற் குறிக்கப்பட்டுளது. விக்கிரமாதித்தன் காஞ்சி நகரைக் கைப்பற்றியபோது அவன்பால் தோல்வியுற் ருேடிய, பரமேசுரவர்மன் தன்னுடைய சேனைகளே ஒருங்கு திரட்டிக் கொண்டு சென்று திருச்சிராப்பள்ளிக்கு அருகி லுள்ள பெருவள நல்லூரில் விக்கிரமாதித்தனை எதிர்த்துப் பொருதான். இங்கு நிகழ்ந்த கடும் போரில் தன்னுடைய சேனைகளை யெல்லாம் இழந்து தோல்வியுற்ற விக்கிர மாதித்தன் தன்னந்தனியே ஒரு கந்தையைப் போர்த்துக் கொண்டு போர்க்களத்திலிருந்து தப்பியோடினுன் எனக் கூரம் சாசனம் கூறுகின்றது. காஞ்சியிலுள்ள கயிலாசநாதர் கோயிலில் வரையப்பட்ட க ல் .ெ வ . டொன்றில் ரணர சிகபுரமர்த்தனன் எனப் பரமேசுரவர்மன்

குறிக்கப் படுதலால், இவன் ரணாசிகளுகிய விக்கிரமாதித்