பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

பன்னிரு திருமுறை வரலாறு


தனைத் துரத்திச் சென்று அவனது தலைநகராகிய வாதாபியை அழித்துத் திரும்பியிருத்தல் வேண்டுமென உய்த்துணர்ந்துரைப்பர் சிலர். பரமேசுர வர்மன் சளுக்க வேந்தனகிய விக்கிரமாதித்தைேடு புரிந்த இப்போர்ச் செயல்களையே வெய்யகலியும் பகையும் மிகை யொழியும் வகையடக்கி........ ஐயடிகள் நீதியால் அடிப்படுத் துஞ் செங்கோலார் எனவும், சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்து' எனவும் வரும் தொடர்களால் திருத்தொண்டர் புராண

ஆசிரியர் குறித்தனரெனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

பரமேசுர வர்மனுகிய இப்பல் லவ வேந்தன் சிவபெரு மான்பால் அளவிலாப் பேரன்பு செலுத்திய சிறந்த சிவ னடியானென்பது, இவன் கூசம் என்ற ஊருக்குப் பரமேசுர மங்கலமெனப் பெயர் தந்து அதன் கண் விச் சாவி நீத பல்லவ பரமேச் சுரக் கிருகம் என்ற சிவாலயத்தைக் கட்டி யிருத்தலாலும், மாமல்லபுரத்தில் இவன் பாட்டனுகிய நரசிம்ம வர்மனு லமைக்கப்பட்டதும் இவல்ை முற்றுவிக்கப் பெற்றதுமாகிய அத்யந்த காம பல்லவேச்சுரகிருகம் என்ற சிவாலயத்தை யடுத்த கணேசாலயம் என வழங்கும் ஒரு கற் கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள வடமொழிச் சுலோ கங்கள், பக்தி நிறைந்த மனத்திற் பவளுகிய சிவனை இடை விடாது சிந்தித்துக் கொண்டிருப்பவனென்றும் சிவ வழி பாட்டிற் பேரார்வமுடையவனென்றும் இவனது சிரசின் மேல் சங்கரன் எப்போதும் குடிகொண்டெழுந்தருளியுள்ளா னென்றும் இவனைச் சிறந்த சிவனடியாளுகக் குறித்துப் போற்றுதலாலும் நன்கு விளங்கும். கருங்கற்களே வெட்டி யெடுத்து அடுக்கிக் கட்டிய தமிழகத்தின் முதற் கற் கோயிலாகத் திகழ்வது கூரத்தில் பரமேசுர வர்மனுல் நிறுவப்பெற்ற விச்சாவி நீத பல்லவ பரமேச்சுர கிருகமே யாகும். இவ்வாறு சிவபெருமானுக்குப் புதிய முறையிற் கற்றளி யமைத்துச் சிவநெறியைக் கடைப்பிடித்து அறம் வளர ஆட்சி புரிந்த இம் மன்னர் பெருமானை செய்ய சடையார் சைவத் திருநெறியால் அரசளிப்பார் எனவும் தருமநெறி தழைத்தோங்கத் தாணிமேற் சைவமுடன் அருமறையின் துறை விளங்க அரசளித்தாரெனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டாரெனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். மாமல்ல புரத்திலுள்ள