பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயகுர் 543.

கணேசாலயத்திற் பொறிக்கப் பெற்றுள்ள வடமொழிச் சுலோகங்கள் பரமேசுரவ மணுகிய இவ் வேந்தனுக்கும் இவளுல் வழிபடப்பெறும் தனி முதற் பொருளாகிய சிவ பெருமானுக்கும் பொருந்து ம்படி சிலேடைப் பொருள் தருவனவாக அமைந்திருத்தலை நோக்குங்கால் அச் சுலோகங்களின் பொருள் நலங்களை யுணர்ந்து மகிழும் வடமொழிப்புலமை இவ்வேந்தன்பால் அமைந்திருந்த தென்பது நன்கு புலனும். வட நூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப்பணி செய்யப் பாரளிப்பார் என ஐயடிகளைக் குறித்துச் சேக் கிழார் கூறும் வாய்மொழி இவ்வேந்தனுக்கு முழுதும் ஏற்புடையதாதல் காணலாம். மேல் எடுத்துக் காட்டிய குறிப்புக்களால் சிறந்த சிவ பத்தனு கவும் வேந்தர் வேந்தனுகவும் விளங்கிய இப்பரமேசுரவர்மன் சிவனரு எால் மெய்யுணர்வு கைவரப்பெற்றுத் தனது அரசுரி மையைத் தன் புதல்வனும் பெரு வீரனுமாகிய ராஜ சிம்ம பல்லவன்ப ல் ஒப்புவித்துத் துறவு நெறியை மேற். கொண்டு திருநெறிய தமிழ் வளர்க்கும் சிவஞானியாகி ஐயடிகள் காடவர் கோன் எனப் போற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது இனிது புலனுதல் காண்க.

இனி, ஐயடிகள் காடவர் கோளுகிய இப்பல்லவ வேந்தர் வட மொழிப் புராணமொன்றில் சிம்ஹ ங்க, பத சிம்ஹா பஞ்சபத சிம்ஹா என்ற பெயர்களையுடையவராகக் குறிக்கப்பட்டுள்ளாரெனவும் அவருடைய மகன பீமவர்மன் என அந் நூல் கூறுகின்றதெனவும் பல்லவர்குடிவழியில் பீமவர்மன் சிம்ம விஷ்ணு என்பவர்களுக் குத் தந்தையாகக் குறிக்கப்பட்டோன் மூன்ரும் சிம்ம வர்மனுதல்ால் அவனே ஐயடிகள் காடவர் கோளுவனெனவும். ஆகவே ஐயடிகள் காடவர் கோன் நாயனுர் என்னும் இவ்வாசிரியர் தேவார ஆசிரியர் மூவர்க்கும் முற்பட்டவராய்க் கி. பி. 550-573ல் வாழ்ந்தவரெனவும் கூறுவாருமுனர்.'

கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்ட பல்லவ மன்னர்கள் தமிழ் மொழியில் பற்றில் லாதவரென்பதும் தமிழை நன்கு பயில தவரென்பதும் அவர்களது ஆட்சிக் காலத்தில் வெளிவந்த சாசனங்கள் யாவும் தமிழல் லாத

1. டாக்டர் மா. இராச மாணிக்களுர் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 95, 96.