பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550

பன்னிரு திருமுறை வரலாறு


வேற்று மொழியிற் காணப்படுதலாலும் அவர்கள் புனைந்து கொண்ட பட்டங்களு ளொன்றேனும் தமிழாக இல்லாமை யாலும் நன்கு துணியப்படும். கி. பி. ஏழாம் நூற்ருண்டு தொடங்கியே பல்லவர்கள் தமிழ் மொழியிலும் சிவநெறி யிலும் பற்றுடையராய்த் தமிழ் வேந்தர்களாக மாறினர்க ளென்பது அவர்களது ஆட்சி முறையினையும் அவரளித்த சாசனங்களையும் நோக்குவார்க்கு நன்கு புலனும். எனவே கூேடித்திரத் திருவெண்பாவாகிய இனிய செந்தமிழ்ப் பாடல்களே அருளிச்செய்த புலமைச்செல்வராகிய ஐயடிகள் காடவர்கோன் நாயனர் கி. பி. ஏழாம் நூற்ருண் டிற்குப் பிற்பட்டுத் தோன்றியவரெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். கி. பி. 600 முதல் 630 வரை ஆட்சி புரிந்த மகேந்திர பல்லவன் என் பான் முதலிற் சமண சமயத்தை மேற் கொண்டொழுகிப் பின்பு திருநாவுக்கரசடி களது திருத்தொண்டின் திறத்தாற் சைவனுகிச் சிராப் பள்ளிக்குன்றில் இப்பொழுதுள்ள சிவாலயத்தைக் கட்டினுன் என்பதும் இக்கோயில் கட்டப்பெறுதற்கு முன்பு இம்மலை சிரா என்னும் சமண முனிவருடைய தவப்பள்ளி யாகத் திகழ்ந்ததென்பதும் ஆராய்ச்சியாளர் துணியாகும். மகேந்திரவர்மன் சைவகைத் திருந்திய பின் அமைத்த இத் திருச்சிராப்பள்ளித் திருக்கோயிலை ஐயடிகள் தாம் பாடிய கூேடித்திரத் திருவெண்பா 17-ம் பாடலிற் குறிப் பிடுதலால், அவர் மகேந்திர வர்மனுக்குக் காலத்தாற் பிற் பட்டவரென்பது நன்கு தெளியப்படும். ஆகவே ஐயடிகள் என்ற பெயரை வடமொழிப் புராணமொன்றில் தெளி வின்றிக் கூறப்பட்ட பஞ்சபத சிப் ஹா என்பதன் மொழி பெயர்ப்பாகக் கொண்டு மூன்ரும் சிம்மவர்மனே ஐயடிகள்

காடவர்கோன் என்பார் கூற்று சிறிதும் பொருந்தாதென் பது திண்னம்,

வேந்தர் பெருமானுக, விளங்கிய ஐயடிகள் காடவர் கோன் என்பார், அரசியலாட்சியைத் துறந்து தில்லைத் திருச்சிற்றம்பலம் முதலாகவுள்ள சிவாலயங்கள் பலவற் றையும் நேரில் கண்டு வணங்கி ஒவ்வொரு திருத்தலத் தினையும் ஒவ்வொரு வெண்பாவினுற் பாடிப் போற்றினர்

1. திருவாளர் தி. வை. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் ஆராய்ந்தெழுதிய திருச்சிராப்பள்ளி செந்தமிழ் 45-ம் தொகுதி பக். 77-82 ) என்ற கட்டுரையை நோக்குக.