பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552

பன்னிரு திருமுறை வரலாறு


லுைம் முதுமையிலுைம் உடல் தளர்ந்த நிலையில் மனை மக்கள் முதலிய சுற்றத்தார் அழுதிரங்க உயிர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன்னரே இறைவன் கோயில்கொண் டருளிய திருத்தலங்களை வழிபட்டுய்தல் வேண்டுமென அறிவுறுத்துவனவாகவும் மோனே, எதுகை, யமகம், திரிபு முதலிய அணிநலங்களைப் பெற்று விளங்குகின்றன.

எங்கும் ஒடித்திரிந்து தொழில் புரியும் ஆற்றல் உடம்பிற் குறைந்தபோது, முன்பு சொல்வழி நடந்த சுற்றத்தார்களும் மனம் மாறுபடுகின்றனர். முதுமையும் விரைந்து பற்றுகின்றது. தேடிப்பெறுதற்குரிய நல்ல மக்கட் சட்டகமாகிய இவ்வுடம்பு சிதைந்து பொதுவிட மாகிய சுடுகாட்டிற் சுடப்பட்டழிதற்கு முன் இறைவன் திருக்கூத்தியற்றும் தில்லைச் சிற்றம்பலத்தை நெஞ்சமே நினைந்து போற்றுவாயாக என்பார்,

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்ருருங் கோடுகின் ருர் முப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணுமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர்.

எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த பாடல், ஐயடிகள் பெற்ற உலக அனுபவத்தினை நன்கு தெளிவிப்பதாகும்.

இருந்த இடத்தைவிட்டெழுவதற்கு வலியின்றி அவ் விடத்தில் இருந்தும் உடல் கூனி வளைய ஒருகையிற் கோலூன்றித் தள்ளாடி நடந்து இருமல் நோயாற் பெரிதும் வருந்தி நுரைத்துக் கோழை ஆறுபோல் வாய் வழியே பாய்வதற்குமுன் ஐயாறு என்னும் திருத்தலத்தினை வாயாற்சொல்லி வழிபட்டு உய்வாயாக என அறிவுறுத்துவ தாக அமைந்தது,

குந்தி நடந்து குனிந்தொருகை கோலு ன்றி

நொந்திருமி வேங்கி நுரைத்தேறி - வந்துந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.

என்ற திருவெண்பாவாகும். இத்திருப்பாடல் முதுமை நோய் முதலியவற்ருல் மக்கள் யாக்கை யெய்தும் இழி

நிலையை விளக்கி இளிவரல் என்னுஞ்சுவைக்கு எடுத்துக் காட்டாக விளங்குதல் காண்க,