பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயடிகள் காடவர்கோன் நாயஞர் §53

உடம்பைவிட்டு உயிர் பிரிந்த நிலையில் அவ்வுடம்பு விறைத்துக்கொள்ளாதபடி ஆடையின் கரைகளைக் கிழித்து அவற்ருல் கால்களையும் கைகளையும் கட்டிப் பிணமாகிய அதற்கு மாலை தலைக்கணிந்து கண்ணில் மையெழுதிக் கோலஞ்செய்து அதன் மேற் பருநூலால் நெய்த கோடித் துணியைப் போர்த்து மகளிர் பலர் கூடியிருந்து அழுது அரற்றும் துன் பநிலையினதாகிய சாக்காடு நேர்தற்குமுன் இறைவன் எழுந்தருளிய திருக்கோடிகா என்னுந் திருத் தலத்தினை யடைந்து வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் என வற்புறுத்துவது,

காலைக் கரையிழையாற் கட்டித்தாங் கையார்த்து மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர் பருக்கோடி மூடிப் பலரழா முன்னம் திருக்கோடி காவடை நீ சென்று, என்ற திருவெண்பாவாகும். இவ்வாறு ஒருவனது உயிர் உடம்பைவிட்டு நீங்கியபின் அவனுடைய வாழ்க்கைத்துணை ஆகிய இல்லாளும் அவன் ஈட்டிய பெரும்பொருளும் மனை யின் அளவே அமைவதன்றி அவனைத் தொடர்ந்து செல்லு தலில்லை. அவனைப் பற்றிப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறு கின்ற சொற்களும் அவனை நன்கறிந்து பழகிய அயலாரது நெஞ்சத்துடிப்பளவேயன்றி நெடுங்காலம் நிற்பன அல்ல. அவனுடைய நல்ல சுற்றத்தார்களும் அவனை யடக்கஞ் செய்து அன்று நீரில் முழுகிய அளவே அவனைப் பற்றிய நினைப்பை மறப்பராதலின் அவர்களும் அக்குளத்தின் நீரளவன்றி அவனைத் தொடர்வதில்லை. நெஞ்சமே இவ்வுண்மையை யுணரவல்லாயாயின், வளைகுளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய ஈசனை நினைந்து வாழ்த்தி உய்திபெறுவாயாக என்பார்,

இல்லும் பொருளும் இருந்த மனையளவே சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே வளைகுளத்துள் ஈசனேயே வாழ்த்து, எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துகின் ருர். இத் திருப்பாடல் உயி களுக்கு இறைவனைத் தவிரத் துணை யாவார் எவருமிலர் என்னும் உண்மையைத் தெளிவாக அறிவுறுத்துவதாகும்.

மணம் பொருந்திய இதழ்களையுடைய கொன்றை மலர் மாலையையணிந்த பேரொளிப் பிழம்பாகிய சிவபெரு