பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 塞擦

விழித்துணர்ந்த அவர்கள் திருக்கோயில் மண்ட பத்திலே வந்து கூடித் தாங்கள் கண்ட கனவினே ஒருவரொடொருவர் சொல்லி மகிழ்ந்து திருவாதவூரடிகளை யடைந்து இறைவனது அருள் வாக்கினை யெடுத்துரைத்து வணங்கினர்கள். இறைவனது அருளிப்பாட்டினை யறிந்த வாதவூரடிகள், தில்லை மூவாயிரவருடன் போந்து கூத்தப் பெருமான வணங்கி யருள் பெற்றுப் புத்தர்கள் தங்கிய மண்டபத்தை அடைந்தார். சிவபெருமானுக்கு அன்பிலாதா சாகிய புத்தர்களைத் தம் கண்ணுற் பார்த்தலாகாதென்று நடுவே திரையிடுவித்து அத்திரைமறைவில் ஓர் ஆசனத் தில் அமர்ந்தார். சோழ மன்னன் விரைந்து அங்கு வந்து திருவாதவூரடிகள் திருவடிகளை யிறைஞ்சி அவரருகே அமர்ந் தனன். அப்பொழுது ஈழத்தரசன் எழுந்து சென்று தான் கொணர்ந்த திறைப்பொருளைக் கொடுத்துச் சோழ மன்னனை வணங்கினன். சோழனும் மகிழ்ந்து அவனைத் தன்னருகே அமர்த்திக் கொண்டான், ஆராய்ந்துணர்ந்து வெற்றி தோல்வியினை நடு நின்று எடுத்துரைக்கும் சான் ருேர்களும் அவை நடுவே வந்தமர்ந்தார்கள். எல்லோரும் வந்து நிரம்பிய அச் சபையிலே சோழ மன்னன் திருவாத வூரடிகளை வணங்கி நின்று சைவ சமயத்தை நிலை நிறுத்து வது தங்கள் கடமை. தோல்வியுற்ற புத்தர்களைப் போக்கு வது எனது கடமை என மொழிந்தான். வாதவூரடிகள் புத்த குருவை நோக்கி நீ வந்த காரணம் என்ன என வினவிஞர். எங்கள் தெய்வத்தை யன்றி வேறு தெய்வ மில்லை யென்று யாவருங் காண உறுதிப்படுத்தி இப்பொன் னம்பலத்தே எங்கள் புத்த தேவரை வைத்தற்காக நேற்றே இங்கு வந்து காத்திருக்கிறேன் எனப் புத்த குரு கூறினன். அது கேட்டு வாதவூரடிகள் புன்முறுவல் செய்து நினது கடவுளிலக்கணமும் முத்தி நிலையும் இன்னவெனச் சொல் வாயாக’ என்ருர், புத்த குரு திரிபிடகத்திற் சொல்லிய வண்ணமே தன் சமயக் கொள்கைகளை யெடுத்துரைத்தான். திருவாதவூரடிகள் அவன் சொல்லியவற்றை யெல்லாம் அளவை நூல் வரம்பு தவருது மறுத்துரைத்தார். தன் சமயக் கொள்கை மறுக்கப்பட்டமையால் ஒளி மழுங்கிய புத்த குரு அடிகளை நோக்கி தும் கடவுள் யாது? நுமது முத்தி ாது ' என வினவினன். வாதவூரடிகள் சிவபெருமானது.

பெ ருமையினை விரித்துரைத்தார். அவ்வளவில் புத்த குரு