பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

பன்னிரு திருமுறை வரலாறு


மானுக்கு ஆளாகி ஊர்தோறும் கையில் ஒடேந்திப் பிச்சை யேற்றுண்டுமகிழும் தொண்டர் வாழ் வே இவ்வுலக முழு வதும் தமது வெண்கொற்றக் குடைநிழற் கீழடங்கி வாழப் பாரெலாம் ஆளும் முடிவேந்தரது அரசியற் பெருஞ்செல் வத்தைக் காட்டிலும் மும்மடங்கு உயர்ந்ததென்பது, வேந்தர்பெருமானுக விளங்கிய ஐயடிகள் காடவர் கோன் நாயனரது உள்ளத் துணியாகும். இங்ங்னம் இறைவனுக்கு ஆட்பட்டு வாழும் தொண்டர் வாழ்வு, முடிவேந்தர் வாழ் வினும் மும்மடங்கு சிறந்ததென்பதனைத் தம்முடைய அநுபவத்தால் அறிந்ததனுல்தான் முடிவேந்தராக விளங் கிய இக் காடவர்கோமான் தமது அரசபதவியினைத் துறந்து ஐயடிகள் எனப்போற்றப்பெறும் சிவனடியாராயினர் என்ற செய்தி,

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மை-கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும். எனவரும் இவரது வாய்மொழியாலும், இவ் வாய்மொழிப் பொருளையும் இவரது வரலாற்றையும் உணர்த்தப் போந்த நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில்,

சத்தித் தடக்கைக் குமரனற் ருதை தன் தானமெல்லாம் முத்திப்பதமொரொர் வெண பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மை நன் ருல் அர ற்காய் ஐய மேற்றலென்னும் பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம் பல்லவனே. எனக்கூறி இவரைப் பத்திக்கடல் எனப்பாராட்டிப் போற்று தலாலும் நன்கு விளங்கும்.

வெம்மை மிக்க நஞ்சினையுண்டு மிடற்றிலடக்கி விண் ைேர்களை உய்வித்தருளிய இறைவன் வீற்றிருக்கும் திரு வொற்றியூரை வழிபட்டுப் பிச்சையேற்றுண்ணுந் துறவி யாக இருக்கப்பெறுவேனுயின், பற்றுக்கோடாக மூ லகங் க ையும் ஆட்சி புரிந்து குடிமக்களைப் பாதுகாத்து இறவா திருக்கும் வாழ்வு எனக்குத் தானே வந்து கிடைத்தாலும் அதனை ஒரு பொருளாக எண்ணி விரும்பியேற்றுக்கொள்ள மா. .ே ன் என ஐயடிகள் காடவர்கோன் நாயனுர் துறவு நெறியில் தமக்குள்ள பெருவேட்கையை விரித்துரைப்ப தாக அமைந்தது,