பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

பன்னிரு திருமுறை வரலாறு


பரமனையே பாடுவாராகிய அப்பாணர்க்குப் பெரும்பொருளை வரையாது வழங்கியவரென்பதும், தொண்டை நாட்டில் இராசசிம்மபல்லவனும் பாண்டி நாட்டிற் கோச்சடையன் ரண தீரனும் அரசு வீற்றிருந்த காலமாகிய கி.பி.570-710ல் மலைநாட்டையாளும் வேந்தர் பெருமானுக விளங்கியவ ரென்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. இவரது வரலாறு சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றுடன் பிரிவின்றி இணைந்துளது. திருத்தொண்டர் புராண ஆசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனுர் புராணம், வெள்ளானைச் சருக்கம் என்ற இருபகுதிகளிலும் இதனை விரித்துக் கூறியுள்ளார்.

வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பாகிய தமிழ கத்திற் குடபுலம் எனப்படும் ம லே ந ட் டி .ே ல கொடுங்கோளுரிலே படைப்புக் காலந்தொட்டு நிலை பெற்றுவரும் சேரர் குடியிலே சேரர் குலமும் உலகமும் செய்த பெருகு தவத்தின் பயனுகப் பெருமாக் கோதையார் என்ற புதல்வர் பிறந்தார். அரச குமரர கிய அவர், மண் மேற் சைவநெறி வாழ வளர்ந்து முன்னைப் பல பிறவி களிலும் பெற்ற பேரன்பினுற் கண்ணுதற் பெருமாளுகிய சிவ பெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்துடைய ராயினர். தமக்குரிய அரசியற்ருெழிலை விரும்பாமல் திரு வஞ்சைக்களமென்னுந் திருக்கோயிலை யடைந்து சிவபெரு மானுக்குத் திருத்தொண்டு புரிந்துறைதலை விரும்பினர். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல எனவுணர்ந்த அப்பெருந்தகையார் நாடோறும் விடியற்காலத்தே துயில் நீத்தெழுந்து நீராடித் திருவெண்ணிறணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக் களத் திருக்கோயிலில் திருவலகும் திருமெழுக்குமிட்டுத் திருமஞ் சனங் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டி, முன்னே அரு ளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒரு நெறியமனம் வைத்து ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வந்தார். இங்ங்னம் நிகழும் நாளில் மலைநாட்டை யாட்சி புரிந்த செங்கோற் பொறையன் என்ற சேர வேந்தன் வையமுந் தவமுந் தூக்கின் தவத்திற்கு ஐயவியனைத்தும் ஆற்ருது’ என்ற உண்மையையுணர்ந்தவனகித் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்தற் பொருட்டுத் தவவனத்தினைச் சார்ந்தனன், - - 3.