பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயகுர் 557

இந் நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச் சர்கள் சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சில நாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண் டொழுகிய பழைய முறைமைப்படி அந் நாட்டின் ஆட்சி யுரிமை திருவஞ்சைக் களத்திலே திருத்தொண்டு புரிந்து வரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக் கோதையார் பால் நிலைபெற்றிருத்தலை நன்குணர்ந்தனர். திருவஞ் சைக் களத்தையடைந்து பெருமாக் கோதையாரை இறைஞ்சிப் போற்றினர். தொன்மை மரபின்படி இம் மலை தாட்டின் ஆட்சியுரிமை தங்கள்பால் அமைந்திருத்தலால் தாங்களே இம் மலை நாட்டினைப் புரக்கும் வேந்தர் பெரு மாகை முடிசூடி ஆட்சிபுரிந்தருளுதல் வேண்டும் என அவரைப் பணிந்து வேண்டினர். இந்நிலையிற் பெருமாக் கோதையார் மேன் மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவத்தொண்டுக்கு இடையூறேற்படும் நிலையில் சேரநாட்டு ஆட்சியுரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்ருர்கள். எவ்வுயிர்க்கும் அன்பு செலுத்துமியல் பினதாகிய இச்சிவத் தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டையாட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதாளுல் அப்பெரு மானது திருவுள்ளக் கருத்தையுணர்ந்து நடப்பேன் எனத் தம்முள்ளத்தில் எண் ணிக் கொண்டு திருவஞ்சைக் களத் திருக்கோயிலிற் புகுந்து இறைவன் திருமுன்னர்ப் பணிந்து தின் ருர். இறைவனது திருவருளால் தமக்குரிய அரசுரி மையில் வழுவாது ஆட்சி புரிந்து இறைவனைப் பேரன்பி ளுல் விரும்பி வழிபடுமியல்பும், புல் முதல் யானை யிருக வுள்ள எவ்வுயிர் களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசிய லின் நலந்தீங்கு குறித்துக் கூறுவனவற்றை மனத்தினுல் உய்த்துணர்ந்துகொள்ளும், நுண்ணுணர்வும், .ெ க ட த தறுகண்மையும், கைம்மாறு கருதாது இரவலர்க்கியவல்ல குறையாத பெருவண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றி யமையாத படை ஊர் தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும் தம்பால்வந்து பொருந்தப்பெற்ருர் பெரு மாக் கோதையார். இங்ங்னம் அஃறிணையுயிர்களும் உயர் திணை மக்களும் கூறிய சொற்பொருளையுய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்குக் கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று.