பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 559

அன்பு நிரம்பிய சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சரனை வரும் அப்பெருந் தகையாரை வணங்கிப் போற்றினர்கள். சேரமான் பெருமாள் யானைமீது அமர்ந்து நகர் வலஞ் செய்து அரண்மனையை யடைந்து மன்னர் போற்றிட அரியணையில் வீற்றிருந்து அரசு புரிந்தருளினர். குடபுலவேந்தராகிய இப்பெருந்தகையார் குணபுலவேந்தராகிய சோழ மன்ன ரோடும் தென் புல வேந்தராகிய பாண்டிய மன் ைரோடும் கெழுதகை நண்பராக விளங்கித் தமிழ் நாட்டின் மூவேந்தர் எனப போற்றப்பெற்றுத் தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்ருெளியாகிய சிவநெறி வளரவும் வேதநெறி வளரவும் அற நூல்முறையே ஆட்சி புரிந்தனர். சேர சோழ பாண் டியரென ச் சிறப்பித துப் போறறும் நிலையில் தமிழகத்தின் ஒற்றுமை வளர மலை நாட்டை ஆட்சிபுரியும் பெரு மாக்கோதையார் தாம்பெற்ற அரச பதவியின் பயனும் நிறைந்த தவமும் தேடும் பொருளும் பெருந்துணையும் ஆகிய இவையெல்லாமாக விளங்குவது தில்லைச சிறறம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடித்தாமரையெனத் தெளிந்தார். கூத்தப்பிரானது எடுத்த திருப்பாதத்தினை நாள் தோறுந் தவருது வழிபடுதலைத் தமக்குரிய கடமையாக மேற் கொண்டார். சேரமான் பெருமாள் செய்யும் அன்பு நிறைந்த வழிபாட்டினை யேற்றுக் கொண்ட இறைவர் தமது திருவடிச் சிலம்பின் ஒலியின ச் சேரமான் செவிகுளிரக்கேட்டின்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டருளிஞர்.

இவ்வாறு சிவபூசையிலீடுபட்ட சேரமான் பெருமாள் சிவனடியார்களுக்கு வரை யாது கொடுத்தும் சிவவேள் வி கள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார் இந் நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திரு வாலவா யென்னுந் திருக்கோயிலிலே எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையாற் பரவிப்போற்றும் பாணபத்திரனென்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு அவரது கனவிலே தோன்றி, ‘அன்பனே, என்பாற் பேரண் புடைய சேரமான் பெருமாளென்னும் வேந்தன் உனக்குப் பொன். பட்டாடை நவமணிக்கலன்கள் முதலாக நீ வேண்டியவெல் லாங் குறைவறக் கொடுப்பான். அவனுககு ஒரு திருமுகம்