பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

பன்னிரு திருமுறை வரலாறு


எழுதிக் கொடுக்கின்ருேம். நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலை நாடு சென்று பொருள் பெற்று வருவாயாக எனக் கூறி மதிமலிபுரிசை யெனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினர். திரு வாலவாயுடையார் அருளிய திருமுகப் பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர், சேர நாட்டையடைந்து சேரமான் பெரு மாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான் அப்பாசுரத்தைப் பல முறை படித்து உள்ளமுருகி ஒர். அமைச்சர் முதலியோரை யழைத்துத் தமது நிதியறையிலுள்ள பலவகைப் பொருள் களையும் பொதி செய்து கொணரச் செய்து இப்பெரும் பொருளையும் யானே குதிரை முதலிய சேனைகளையும் இம் மலைநாட்டு ஆட்சியுரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும் எனப் பாணபத்திரரை வேண்டி நின் ருர். அவரது கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பான பத்திரர் என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள் களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது இறைவனது ஆணையாதலின், அரசாட்சி யும் அதற்கு இன்றியமையாத அரசுறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டருளுதல் வேண்டும் என்று கூறினர். இறைவரது ஆனையெனக் கேட்ட சேர மான் பெருமாள், அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திராது வேண்டுகோளுக்கிசைந்தனர். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினுல் தம்மைப் பின்தொடர்ந்து வந்து வழியனுப்பிய சோமான் பால் விடை பெற்று மதுரை நகரத்தையடைந் திருந்தார்.

கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள், என்றும் போல ஒரு நாள் சிவபூசை செய்து கொண்டிருந்தபொழுது வழிபாட்டில் நாடோறுங்கேட்டின்புறுவதாகிய திருச்சிலம் பொலியை அன்று கேட்கப் பெருது பெரிதும் மனங்கலங் கினர். அடியேன் என்ன பிழை செய்தேளுே எனப் பொரு மிஞர். இறைவனை வழிபடும் ஆசை காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினுல் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்னவிருக்கிறது

எனக்கவன்று தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் ఓ త) ...

வாளையுருவித் தம் மார்பிலே நாட்டப் புகுந்தார். அந்நிலை