பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 56;

வில் அருட்கடலாகிய கூத்தப்பெருமான் விரைந்து தமது திருவடிச்சிலம்பொலியைச் சேரமான் பெருமாள் செவி குளிரக் கேட்டு மகிழும் வண்ணம் மிகவும் ஒலிக்கச் செய் தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது கையிற் கொண்ட உடைவாளைக் கீழே எறிந்து விட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, தேவர் களுந் தேடிக் காணுதற்கரிய பெருமானே இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்ந்தது எது கருதி' என வினவினர். அந்நிலையில் தோன்ருத்துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் சேரனே, வன்ருெண்டனுகிய சுந்தான் தில்லை யம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றியவுணர்வுடன் நின்று புகழமைந்த திருப்பதிகத்தால் நம்மைப் பரவிப் பாடினன். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்த்தோம் எனத் திருவாய் மலர்ந்தருளினர். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் அடியார் களுக்கு அருள் புரியும் இறைவனது கருணைத்திறம் என்னே' என வியந்து உளமுருகினர். இறைவன் திரு நடம்புரிந்தருளும் பெரும் பற்றப்புலியூரிலமைந்த பொன்னம் பலத்தையும் அங்கே இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் .ெ ரியோராகிய வன்ருெண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டுமெனக் கருதிச் சோழ நாட் டிற்குச் செல்ல விரும்பினர். திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளு டன் புறப்பட்டுக் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடி யார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழ நாட்டை அடைந் தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூ தூரின் எல்லையையணுகினர்.அந்நிலையில் தில்லைவாழந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு வரவேற்றனர். அடியார் களோடு தில்லைத் திருவீதியை வலம்வந்து எழுநிலக் கோபுரத்தை வணங்கி உட்புகுந்த சேரமான் பெருமாள் நாயனர் திருப்போம்பலத்தையிறைஞ்சியுட் புகுந்து இறை வன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந் தார். அளவிலின்பப் பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலனும் ஒன்றிய ஒருமையுணர்வாற் கண்டு உருகிப் போற்றித் திருவருளின்பக்கடலில் திளைத்து இன்புற்ருர், தாம் பெற்ற பேரின்பத்தினை வையகத்தா

36