பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

பன்னிரு திருமுறை வரலாறு


தலங்களைப் பணிந்து இன்புற்றனர். சேரமான் பெருமாளும் சுந்தரரும் பாண்டியர் சோழராகிய இருபெருவேந்தர் களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தனர். சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரரைத் தங்கள் நாட்டிற்கு எழுந் தருள வேண்டுமென்று பல முறை வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோளுக்கிணங்கிய சுந்தரர், பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார். இரு வரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலை நாட்டவர் எதிர்கொள்ளக் கொடுங்கோளுரை அடந்ைத னர். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்து, தம் தேவி மார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி நிற்க நம்பியா ருரருடைய திருவடிகளை விளக்கி மலர்து வி வழிபட்டு அவருடன் உடனிருந்து அமுதருத்தி உபசரித்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழா வும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாகப் பலவகை விளையாடல்களும் நிகழச்செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர்.

இங்ங்னம் நண்பர் இருவரும் அளவளாவி மகிழு நாட் களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன் றியது. அந் நினைவு மீதுரப்பெற்ற சுந்தரர், பொன்னும் மெய்பொளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமான மறத்தலும் ஆமே ' எனப்பாடித் தமது ஆற்ருமையைத் தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்ருர், சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், இன்று உமது பிரிவாற்றேன் என்செய்கேன் என்றுரைத்து மிகவும் வருந்தினர். நம்பியாரூரர் தம் தோழரை நோக்கி இந்நாட்டிற்கு உளவாம் இடர் நீங்கப் பகைநீக்கி அரசாளுதல் உமது கடன்' என அறிவுறுத்தார். அதனைக்கேட்ட வேந்தர் பெருமான் இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன் பஞ் செய்வன உம்முடைய திருவடித் தாமரைகளே. திருவாரூர்க்கு எழுந்தருள வெண்ணிய தும் மன விருப்பத்தை நீக்கவும் அஞ்சு கின்றேன்' என்ருர் என்னுயிருக்கு இன்னுயிராம்