பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுt 56;

எழிலாரூர்ப் பெருமான வன்னெஞ்சக் கள்வனேன் மறந் திரேன். நீவிர் சிவபெருமான் திருவருளால் அரசுபுரிந்து இங்கிருப்பீராக’ என்றுரைத்து வணங்கினர் வன்ருெண்டர். சேரர் பெருமானும் வன்ருெண்டரை வணங்கித் தம்முடைய திருமாளிகையிலுள்ள பெரும் பொருள்களைப் பொதிசெய்து ஆட்களின்மேல் ஏற்றுவித்து நெடுந்துாரஞ் சென்று வழி யனுப்பினர். சுந்தரரும் தம் தோழரைத் தழுவி விடை பெற்றுத் திருவாரூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்கோளுரிலிருந்து மலைநாட்டை ஆட்சி புரிந்திருந் தார்.

நெடுநாளாயின. பின் சுந்தரர் மீண்டும் கொடுங் கோளுருக்கு வந்து தம் தோழராகிய சேரமன் பெருமா ளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒரு நாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனசாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழி பட்டுத் தலைக்குத் தலைமாலை என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின் ருர். அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான், சுந்த ரை அழைத்துவருமாறு திருக்கயிலா யத்திலிருந்து வெள்ளையானையுடன் தேவர்களைத் திரு வஞ்சைக்களத்திற்கு அனுப்பியருளினர். வெள்ளை யானை யுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலையடைந்த தேவர்கள் நம்பியாரூரரைப் பணிந்து நின்று தாங்கள் இவ் வெள்ளை யானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடனே புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவனது அருளிப்பாடு ' என விண்ணப்பஞ் செய்தார்கள். இந்நிலை யில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த் தோழரும் மன்னுயிர்கள் கூறும் மர்ற்றத்தை உயத்துணர வல்ல திருவருட் செல்வருமாகிய சேரமான் பெருமாளைத் தம் மனத்திற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினர்.

இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர் தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவரு ளாற்றலால் விரைந்துணர்ந்த கழறிற்றறிவாராகிய சேர வேந்தர் பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித்