பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 56?

புகு தலால் இங்கு தும் திரு முன்பு வரப்பெற்றேன். அடி யேன் இங்குத் தெரிவித்துக் கொள்ளும் வேண்டுகோள் ஒன்றுளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன் ருெண்டரது தோழமையை அருளிய பெருமானே, மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடு தற்கரிய பெரி யோனுகிய நின்னைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ்ப்பனுவல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ்ப் பனு வலைத் தேவரீர் திருச் செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான். சேர னே அவ்வுலாவைச் சொல்லுக எனப் பணித்தருளினர். சேரமான் பெருமாள் நாயனரும் தாம் பாடிய திருவுலாப்புறமாகிய செந்தமிழ்ப் பிரபந்தத்தைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத் துரைத்து அரங்கேற்றினர். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக் கொண்ட இறை வன், அவரைநோக்கிச் சேரனே தம் பியாருரணுகிய ஆலால சுந் தானுடன் கூடி நீவி இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றி நட்பீராக எனத் திருவருள் செய்ய, வன் ருெண் டர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலாலசுந்தரராகவும் சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாரா யினர்.

சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலாவைக் கயிலாயத்திலே அரங்கேறிய நாளாகிய அன்று இறைவன் திருமுன்பு இருந்து கேட்ட மாசாத்தனர் அவ்வுலாவை உளத்துட்கொண டு சோழ நாட்டிலுள்ள திருடபிட வூரிலே வளிப்படச் சொல்லி அவ் அருள் நூலை இவ்வுலகில் வழங்கும்படி செய்தனர். இங்கு எடுத்துக் காட்டிய வண்ணம் சேரமான் பெருமாள் நாயனுர் வரலாறு திருத்தொண்டர் புராணத்திலே சேக்கிழாரடிகளால் விரித்துரைக்கப்பெற்றுளது.

சேரமான் பெருமாள் நாடோறும் கூத்தப் பெருமானை வணங்கிச் செய்யும் சிவபூசையிலே அப்பெருமானது திருவடிச் சிலம்பொலியைக் கேட்டு மகிழும் இயல்புடையா ரென்பதும் பாணபத்திரர் பொருட்டுத் திருவாலவாயுடையா ராகிய இறைவரே சேரமான் பெருமாளுக்கு மதிமலிபுரிசை'