பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

பன்னிரு திருமுறை வரலாறு


யெனத்தொடங்கும் திருமுகப் பாசுரத்தை யெழுதி அனுப்பினரென்பதும்,

பரிபுரக்கம்பலை யிருசெவி புண்ணும்

டக்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலி புரிசைத் திருமுகங் கூறி அன்புருத் தரித்த இன் பிசைப் பாணன் பெறநிதி கொடுக்கென உறவிடுத் தருளிய மாதவர் வழுத்துங் கூடற்கிறைவன்

(கல்லாடம் 13-ம் அகவல்)

எனவரும் தொடரால் நன்கு விளங்கும். சிவபெருமான் அனுப்பிய வெள்ளே யானை மீது கயிலைக்குச் செல்லும் சுந்தரரால் நினைக்கப்பெற்ற சேரமான் பெருமாள் தம் முடைய குதிரைக்குத் திருவைந்தெழு த்தினை உபதே சித்து அக்குதிரையை விசும்பின்வழியே செலுத்தி நம்பி யாரூரரைத் தாங்கிச் செல்லும் தெய்வத்தன்மை வாய்ந்த வெள்ளை யானைக்கு முன் செல்லப் பணித்தவரென்பது,

சேரற்குத் தென் குவலர் பெருமாற்குச் சிவனளித்த வீரக்கடகரி முன்பு தம் பந்தி யிவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்புவில்வீரனை வெற்றி கொண்ட சூரற்கெனதுள்ளம் நன்று செய்தாய் இன்று தொண்டுபட்டே, எனவரும் நம்பியாண்டார் நம்பி வாய்மொழியாலும், சுந்தரர் ஏறிய வெள்ளையானைக்குமுன் இவரது குதிரை செல்லும் நிலையில் தஞ்சைப் பெரியகோயிலில் வரையப்பெற்றுள்ள இராசராச சோழன் காலத்து ஒவியத்தாலும் நன்கு தெளியப்படும்.

சேரமான் பெருமாளும் அவர் தோழராகிய சுந்தரரும் தாம் இவ்வுலகில் தாங்கியிருந்த மக்கள் யாக்கையுடனேயே திருக்கயிலாயத்தை யடைந்து சிவனருளில் திளைத்த பெரி யோர்களென்பது,

ஞான வாரூரரைச் சேரரையல்லது நாமறியோம் மாணவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண் வானவராலும் மருவற்கரிய வடகயிலைக் கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள்

கூட்டத்திலே, 186) எனவரும் திருத்தொண்டர் திருவந்த தியாலும்,

' களையாவுடலோடு சேரமான் ஆரூரன் விளேயாமதமாரு வெள்ளசனைமேல் கொன்ஜ ?