பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயகுச் Ꭶ5Ꭶ

எனவரும் திருவிசைப்பாத் தொடராலும் நன்குவலியுறுத் துக்கூறப்பட்ட மெய்ம்மை வரலாருதல் தெளிக.

சேரமான் பெருமாள் நாயனர் திருவாய்மலர்ந்தருளிய செந்தமிழ் நூல்களாகப் பதினுெராந் திருமுறையில் தொகுக்கப்பெற்றுள்ளவை பொன்வண்ணத்தந்தாதி, திரு வாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞான வுலா என்ற மூன்றுமாகும். சேரமான் பெருமாள் தில்லைச் சிற்றம்பலத்தை யிறைஞ்சித் தில்லையம் பலவனது அருட் கூத்தினைக்கண்டு மகிழ்ந்த நிலையிற் பாடிய செந்தமிழ்ப் பனுவல் பொன்வண்ணத்தந்தாதி யென்பர் சேக்கிழார். கட்டளைக் கலித்துறை யாப்பினுல் அமைந்த இந்நூலில் நூறு செய்யுட்கள் உள்ளன. பொன்னுர் மேனியணுகிய சிவ பெருமானைக்கண்டு காமுற்று அவனை அடையப் பெருமை யாற் பசலை நிறங்கொண்டு உடல் வேறுபட்ட தலைவி யொருத்தி, தானும் தன்னுற் காதலிக்கப்பட்ட தலைவளுகிய சிவபெருமானும் பொன் வண்ணமாகிய ஒரே நிறத்தினைப் பெற்று விளங்கும் உருவொப்புமையை யெண்ணி உளங் குளிர்ந்துரைப்பதாக அமைந்தது இப்பிரபந்தத்தின் முதற் செய்யுளாகும். பொன்வண்ணம் என்ற தொடரை இம் முதற்பாட்டின் முதற் சீராகக்கொண்டு தொடங்கி இதன் இறுதிச் செய்யுளாகிய நூருவது செய்யுளைக் கனகமலை யருகே போயின காக்கையு மன்றே படைத்தது பொன் வண்ணமே என முடித்து, அந்தாதித் தொடையமைய இப்பனுவலைச் சேரமான் பெருமாள் திருவாய்மலர்ந் தருளினமையால் இந்நூல் பொன்வண்ணத்தந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று. இதனைச் சீரார்வண்ணப் பொன் வண்ணத்திருவந்தாதி எனச் சிறப்பித்துப் போற் றுவர் சேக்கிழார். பிற்காலத்து ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றைவேந்தன் என்ற நீதிநூல்களும் ஒன்ப தாந்திருமுறையில் திருமாளிகைத் தேவர் பாடிய உயர் கொடியாடை, உறவாகிய யோகம் இணங்கிலாவீசன் என்ற திருவிசைப்பாப் பதிகங்களும் திருவாலியமுதனர் பாடிய பவளமால்வரை யென்றபதிகமும் இப்பொன்வண்ணத் தந்தாதியைப் போன்று முதற்பாடலிலமைந்த முதற் சொற்ருெடராற் பெயர்பெற்றுள்ளமை இவண் ஒப்புநோக் கத்தக்கது.