பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயகுர் 573

வீடுபட்டு அவன் பின்னே செல்வது போலவும் அது கண்ட தாய் தன்னைத் தடுத்து நிறுத்தியது போலவும் களு வொன்று காணுகின்ருள். தலைவி தான் கண்ட கன நிகழ்ச் சியைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்தது,

ஈசனைக் காணப் பலிகொடுசெல்ல எற்றே யிவளோர் பேயனைக் காமுறு பிச் சிகொலா மென்று பேதையர் முன் தாயெனை யீர்ப்பத் தமியேன் தளரவத் தாழ்சடையோன் வாவெனப் புல்லவென்ருன் இமைவிண்டன. வாட்கண்களே.

என்ற பாடலாகும். ஈசனைக் காணும் விருப்புடன் உண வாகிய பலியைக் கையிலேந்தி வெளியே சென்றேன். அது கண்டு பேய்களோடாடும் ஒருவனைக் காதலித்த பித்து டையளாயினுள் இவள் ' என்று கூறி என் தாய் மகளிர் முன்னே என்னைப் பிடித்திழுத்தாள். நாணிழந்து தனிமை யுற்ற யான் அப்பெருமானே அணுகுதற் கியலாது தடைப் பட்டு வருந்தினேன். அப்பொழுது இறைவனே என் முன் வந்து நின்று என்னைத் தழுவ வருக என அழைத்தருளி ஞன் அந்நிலையில் என் கண்கள் இமை திறந்து விழித்தன என்பது இதன் பொருளாகும்.

பிச்சைக் கோலமுடைய பெருமானுடன் உரையாடி மகிழ்ந்த மகளிர் மூவருள் ஒருத்தி தமக்குள் நிகழ்ந்த உரை யாடலைத் தெரிவிப்பதாக அமைந்தது,

காமனை முன் செற்ற தென்ருள் அவள், இவள் காலனென்னுந் தாமநன் மார்பனை முன்செற்ற தென்று தன் கை யெறிந்தாள் நாமுனஞ் செற்ற தன் ருரையென்றேற் கிருவர்க்கு மஞ்சி

ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தனரே. (45)

என்ற பாடலாகும். அந்தணராகிய இவர் முதலில் அழித் தது மன்மதனையே என எங்களு ளொருத்தியாகிய அவள் கூறினுள். மற்ருெருத்தியாகிய இவள் அஃது உண்மை யன்று; இவர் முன் அழித்தது காலனையே என்று தன்கை யறைந்து உறுதி கூறினுள். இவ்விருவர்க்கும் நடுவாகிய யான் அப்பெருமானை நோக்கித் தாங்கள் முதலிற் செற் றது காமனையா அன்றிக் காலனையா என்று வி ைவினேன். இறைவர் அவ்விருவர்க்கும் அஞ்சி இன்னது ஆம், இன் னது அன்று என உறுதியாக மறுமொழி சொல்ல மாட்டா மல் தயங்கினர் என்பது இதன் பொருள்.