பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 575

என்ற பாடலாகும், அழகிய தண்ணளியுடையவராகிய தாங்கள் விரும்பித் தங்கியிருப்பது யாருடைய ஊர் என்று வினவும் நிலையில் ஆரூர் உறைவது என்று கேட்டேன். அது கேட்ட தலைவர் பென்ணே நீ கூறிய அதுவே (ஆரூர் என்பதே) எனது ஊராகும் என்ருர், நுமது ஊரை யான் தெரிந்து கொள்ளாதபடி கவர்பொருள் . உரையாடுத லால் நீர் முதன்மையான வஞ்சகராகவுல் ரீர் என்ற பொரு ளில் அவரை நோக்கித் தலையாய சலவர் எனக் கூறி னேன். அதற்கு (த் தலையிற் பொருந்திய கங்கை நீரை யுடையவர் என வேறு பொருள் கொண். அவர், சந்தனம் பூசிய தோளினே யுடையாய் நீ கூறியபடி அதுவும் தலையாய சலமும்) என்பால் உண்டு என் ருர், மணம் பொருந்திய மாலையை யணிந்தீர் உம்மை யான் இன்னுர் என்று தெரிந்து கொள்ளும்படி எனக்கு விளங்கச் சொல்லும் என்ற பொருளில் கொத்தனை தாரீர் உமையறிய உரை மின் என்றேன். அதற்கு (நும் தேவியாகிய உமையம்மை யார் அறிய மெய்ம்மைய கச் சொல்லும் என உறுதிமொழி செய்யச் சொல்லுவதாகப் பொருள் கொண்டு) மறுமொழி கூற வழியறிய து தன் கையிலேந்திய உடுககையை யொலித்து இவ்வுரையாடலை மேலும் வளர விடாது தடுத்து விட்டார் . எனத் தலைவி தோழிக்குரைத்ததாக அமைந்த இச் செய்யுளில், "},ণ্ড , தலை ய | ய சலவர், உமை யறிய உரை மின் என்ற தொடர்கன், இரு பொருள் தந்து, இங்ங்னம் தன் அன்பிற்குரிய தலைமகளோடு உரையாடிய தலைவராவார் திருவ ரூரில் நீங்கா தெழுந்தருளியிருப்ப வரும் தலையிற் கங்கையைத் தரித்தவரும் உமையோரு பாகரும் ஆகிய சிவபெருமானே என்ற உண்மையினைத் தோழிக்கு விளங்க அறிவுறுத்து நிற்றல் உணர்ந்து இன் புறத்தக்கதாகும்.

தலைமகள், தன்னு காதலிக்கப்பட்ட இறைவனைக் கன விற்கண்டு உரையாடிய திறத்தைத் தன் தோழிக்குப் பின் வருவாறு எடுத்து ரைக்கின் ருள் : பண்டரங்க வேடத் தானுகிய இறைவன் என்னருகே வந்து நின் ஜ என் பற் களைப் பாத்து நின் பல்லின் தன்மை இதுவா என நகையாடுங் குறிப்புடன் பலிதா என்று சொல்லிப் பிச்சை கேட்டான். அதுகேட்ட கான் பல் இந்தா என்று கூறிப் பற்கள் சிலவற்றை என்பால் அவன் தர