பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

பன்னிரு திருமுறை வரலாறு


வருவதாகப் பொருள் கொண்டு, இறைவனே நீ தர விரும்பிய பற்களைத் தக்க யாகத்தில் நின்னுற் பல்லுடை பட்ட சூரியனுக்கே கொடுத்துவிடு என்று கூறினேன். அண்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்குபவனும் அவ்வண்டங்களையெல்லாம் படைத்தருளியவனுமாகிய அப் பெருமான் மீண்டும் என்னை நோக்கித் தான் என்பால் வேண்டியது உணவு என்பது புலப்பட அன்னம் ' என்று கூறினன். அது கேட்ட யான், நீ கூறும் அன்னம் என்பது பிரமனது ஊர்தியாகிய பறவையல்லவா என்றேன். மீண்டு மவன், என்னை நோக்கி நங்கையே யான் கூறும் சொற் பொருளை உணர்ந்துகொண்டு உன் பாலுள்ள உணவை யிடுக என்ற பொருளில் உன் ஐயம்பெய் ' என் ருன். அத் தொடர்க்கு உன்பால் உள்ள ஐந்து அம்புகளையும் எய்க என அவன் கூறுவதாகப் பொருள் கொண்ட யான், அவனை நோக்கி, நின்னுற் குறிக்கப்பட்ட ஐந்தம்புகளையும் உடையவன் மன்மதனே என்றேன். அதுகேட்ட இறைவன் என்னை நோக்கி, நீ யான் கேட்ட வண்ணம் பலியிடாது போயினும் நின் னுடன் உரையாடிய இவ்வளவிலேயே உண்டு பசி தீர்ந்த அமைதி நிலை எனக்குளதாயிற்று என்ற பொருளில், உண்டு இங்கு அமைந்தது என்ருன். அதனைக் கேட்டு உறக்கம் நீங்கி விழித்துக்கொண்டேன் என இங்ங்னம் தலைவி தோழிக்குத் தன் கனவு நிலையைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,

பண்டங்கன் வந்து பலிதா என்ருன் பகலோற் கிடென்றேன் அண்டங்கடந்தவன் அன்ன மென் ருன் அயன் ஊர்தி என்றேன் கொண்டிங்குனையம் பெய்என் ருன் கொடித்தே ரனங்கனென்றேன் உண்டிங்கமைந்ததென்ருற் கதுசொல்ல வுணர்வுற்றதே . என்ற பாடலாகும்,

வண்டுகள் தேன் நுகரும் கொன்றை மலர் மாலையை யணிந்த பெருமானே, நின் திருவடிகளை யடைந்து மலர் து விக் கைதொழுத மெய்யடியார்களுக்கு இடமகன்ற இப் பெரிய வுலகத்தை.ஆனக் கொடுததும் அடியேன் பெற்ற மாவடு வகிர் போலுங் கண்களையுடைய என் மகள் நின்னைக் கைகளால் தொழுதகாலத்து அவளுடைய கைவளைகளைப் பறித்துக்கொண்டும் இங்ங்ணம் இருவேறுபட்ட மன நிலையையுடையையாய் ஒருரில் ஒரு பொருளை இரு விலைக்கு விற்பது போலும் நினது நடுவு நிலைமையற்ற செயலைப்