பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 数7擎

புலப்படுத்தின. அறவுருவாகிய இடத்தைக் கொடிமேற் கொண்டு நற் குணங்களாற் சலியாத பெருமையுடைய கைத் திகழும் நினக்கு இச் செயல் தகுவதோ என இறை வன நோக்கித் தன் மகளது ஆற்ருமை கூறிச் செவிலி இரங்குவதாக அமைந்தது,

ஆடிக்கண்ணி கைதொழுதார்க்ககன் ஞாலங்

கொடுத்தடி நாய் வடிக்கண்ணி நின்னைத் தொழ வளைகொண்டனை வண்டுண்

கொன்றை முடிக்கண்ணியா யெமக்கோரு ரிரண்டகம் காட்டினையாற் கொடிக்கண்ணி மேல் நல்ல கொல்லே றுயர்த்த

குணக்குன்றமே. (73)

என்ற பாடலாகும். ஒருர் இரண்டஃகம் காட்டல் என்பது ஒரு பழமொழி. அஃகம் - முறைமை. மக்களெல்லோரும் அன்பினுல் ஒத்து வாழ்தற்குரிய ஒரே ஊரில் ஒரு பொருள் பற்றி இரு வேறு முறையில் நடந்துகொள்ளும் மன நிலை யுடைய வஞ்சகரது கொடுஞ்செயலைக் குறிப்பது இப் பழமொழி. இஃது ஒரூர் இரண்டகம் காட்டுதல் எனவும் வழங்கும். இத்தொடர்க்கு ஒருளில் ஒரு பொருள் பற்றி இருவேறு மனநிலையுடையாக நடத்தல் எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். இறைவனகிய நீ நின்னை வழிபட்ட கோச் செங்கட் சோழர் மூர்த்திநாயனுர் முதலிய மெய்யடியார்களுக்கு உலகாளும் அரசுரிமையை வழங்கி இன்பஞ் செய்தும், நின்னே அன்பினுல் அடைந்து மகிழ்தற்கு ஏக்கற்றிருக்கும் என் மகளது கைவளைகளைக் கவர்ந்து அவளுக்குத் துன் பஞ் செய்தும், இவ்வாறு ஒத்த அன்புடையாக்களிடத்திலேயே இரு வேறு உள் ளத்துடன் நடந்துகொள்ளுகின்ருய், இம் முறையற்ற செயல் நினது இறைமைத் தன்மைக்கு ஏற்றதாகாது எனச் செவிலி இறைவனை நோக்கி முறையிடும் இம் மொழிகளில், அடி யார்க்கு உலகெலாம் ஆளக் கொடுக்கும் இறைவனது பெருவண்மையும், அருளாளனுகிய அப்பெருமானை நினைந்து தளரும் தலைவியின் மெலிவும் ஒருங்கு புலப்படு தப் பெற்றமை காண்க. இப்பாடலிற் குறிக்கப்பட்ட ஒரு ரிண்டி ஃகம் காட்டுதல் என்ற பழமொழியைத் திருத்தக்க

காப்பியத்துள் சு:மஞ்சரியாரிலம்பகம் 93-ஆம் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.

37