பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் தாவஞர் 579

கின்றது. இதுவே எனது நோய்க்குரிய காரணமாகும். இதனை யறிதற்கு நீ நிமித்திகர் முதலியோரை நாடி விரை யற்க. என்பது இதன் பொருளாகும். ஆருயிர் நாயக ஞகிய இறைவனை அடைய இயலாமையால் வளைகழல உடல் மெலிந்து வருந்துகின்ற எனக்கு நிறையுடைய நெஞ்சினுல் துணைபுரிவார் என்னுயிர்த் தோழியாகிய நின்னைத் தவிர வேறு யாருமிலர் என்பதனை க் குறிப்பான் அறிவுறுத்துவாள் தன் தோழியைச் செறிவளை யாய் எனத் தலைவி அழைத்தமை நினைக்கத் தகுவதாம்.

தலைவளுேடு உடன் பேசதற்கு ஒருப்பட்ட தலைமகளைத் தோழி வழிப்படுத்துரைப்பதாக அமைந்த பாடல், ஒதவளுமம் உரையவன் பல்குணம் உன்னை விட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென் து ஒாதவ மாகிடு மாதவ மாவளக் புன்சடையான் யாதவன் சொன்னுன் அதுகொண் டொழியினி யாரணங்கே,

என்பதாகும். அரிய தெய்வப்பெண் போல்வாய்! நின் தாய் தந்தை ஆயத்தார் முதலியோர் பெயர் குணங்களைக் கூறுதலை விடுத்து நின் ஆருயிர் நாயகனுகிய இறைவ ணுடைய திருப்பெயர்களையே இடைவிடாது சொல் வாயாக, குணங்களாற் சலியாத பெரிய மலை போன்று விளங்கும் அப் பெருமானுடைய அருட் குணங்களையே பேசுக நின்னைப் பிரிவின் றியிருந்த யானும் நீ அவ் விறைவனுடன் சேர்ந்த இந்நிலையில் நின்னை நீங்கி நிற்கின்றேன். இனி நீ நின்னுயிர்த் தலைவளுகிய இறைவன்பின்னே செல்வாயாக. அவனது அருள்வழி யொழுகும் நல் வாழ்க்கையில் திருத் கமுறச் சென்று பொருந்தி வாழ்வாயாக. இங்ங்னம் ஒழுகுவாயாயின் நின்செயல்களால் இவ்வுலகத்திற்குப் பெருகிய தவப் பயன் உளதாகும். பெருந்தவத்தின் உருவாக விளங்குஞ் செஞ்சடைக் கடவுளாகிய இறைவன் நீ எதனைச் செய்ய வேண்டுமென்று நினக்குப் பணி த் த ரு ளி ளு ேன அப்பணியையே குறிக்கொண்டு போற்றிப் பிறவற்றை நீங்கி ஒழுகுவாயாக’ எனத்தோழி தலைவிக்கு அறிவுறுத்து கின்ருள். எவ்வுயிர்க்கும் அன்புடையராய் ஒழுகும் ஈசனடியாரைத் தோழியாகவும், அவரால் நல்வழிப் படுத்தற்குரிய தகுதிவாய்ந்த நல்லுயிரைத் தலைமகளாகவும் கொண்டு, இப்பாட்டின் துறைப்பொருளைக் கூர்ந்து