பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

பன்னிரு திருமுறை வரலாறு


நோக்குமிடத்து, மக்களெல்லோரும் தம்முடைய பாசத் தொடர் பொழிந்து இறைவனுடைய திருவடிக்கண் தலைப் படுதலாகிய ஈறிலாட் பேரின்ப வாழ்வை யடைந்து இன்புறு தற்குரிய நெறிமுறைகள் திருவருட் செல்வராகிய சேரமான் பெருமாள் நாயனரால் இத்திருப்பாடலில் உலக மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றுள்ளமை நன்கு புலம்ை.

இவ்வுலகத்தைத் தோற்றுவித்துக் காத்து மீண்டும் ஒடுக்கி உயிர்களை உய்விக்கும் மும்மூர்த்திகளாக விளங்கும் இறைவன் எல்லாம்வல்ல சிவபெருமானே என்பார்,

வீரன் அயன் அரி வெற்பலர் நீரெரி பொன்னெழிலார் காரொண் கடுக்கை கமலந் துழாய்விடை தொல் பறவை பேரொண் பதிநிறந் தாரிவ ரூர்திவெவ் வேறென்பரால் யாரு மறியா வகையெங்க ளீசர் பரிசுகளே. (95

என அவ்விறைவன தியல்பை விளக்குகின்ருர் சேரமான் பெருமாள் நாயனுர், அரன் அயன் அரி என்பன சிவபெருமானுக்குரிய பெயர்களென்றும், கயிலைமலையும் தாமரை மலரும் பாற்கடலும் முறையே அவ்விறைவன் எழுந்தருளிய இடங்களென்றும் தீவண்ணம், பொன் வண்ணம், கார் வண்ணம் என்பன அவ்விறைவனுடைய திருமேனி நிறங்களென்றும், கொன்றைமலர், தகரை, துழாய் என்பன முறையே அப்பெருமான் அணிதற்குரிய மாலைகளாமென்றும், இடபம் அன்னம் கருடன் என்பன முறையே அப்பெருமானுக்குரிய ஊர்திகளாமென்றும் நிரனிறைப் பொருள் கோள் அமையக்கூறி, இவ்வாறு எங்கள் பெருமாளுகிய ஈசனுக்குரிய தன்மைகள் யாவரும் அறியா வகையில் வேறுவேருக உள்ளனவாயினும், இவை யல்லாவற்றுக்கும் உரிய முதல்வன் ஒருவனே யென்று இத்திருப்பாடலில் சேரமான்பெருமாள் விரித்துக் கூறினமை நினைந்து போற்றத் தக்கதாகும். அயன் அரன் எ ன் னு ம் மும் மூர்த்திகளாக விளங்குபவன் சிவபெருமான் ஒருவனே யென்ற உண்மையை,

பவமலிதொழிலது நினைவொடு பதும நன்மலரது மருவிய சிவன்

எனவும்

உலகுகள் நிலைபெறுவகை நினைவொடு மிகும் அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுருவியல்பரன்' எனவும்