பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயகுt 583

இங்ங்னம் சிவபெருமானது இடப்பக்கத்து எழுந் தருளிய உமையம்மையாரே திருமால என்ற திருவுருவத் துடனும் இறைவனது இடப்பக்கத்தில் விளங்குகின்ருர் என்ற மெய்மையைத் தெரிவிப்பது,

இடமால் வலந்தான் இடப்பால் துழாய் வலப்பாலொண்

கொன்றை வடமா லிடந்து கில் தோல் வலம் ஆழியிடம் வலமான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழினலஞ்சேர் குடமாலிடம் வலங் கொக்கரை யாமெங்கள் கூத்தனுக்கே (6) என்ற பாடலாகும். எங்கள் கூத்தப்பிரானுகிய இறை வனுக்கு இடப்பாகம் திருமால்; வலப்பாகம் தான். இடப் பாலணிந்தது துழாய்மாலே வலப்பாலது கொன்றை மலர் மாலை. இடப்பக்கத்திலுடுக்கப்பெற்றது பொன்னுடை; வலப் பக்கத்தது புலித்தோல், இடது திருக்கையில் ஏந்தப் பெற்றுள் ளது சக்கரப்படை வலப்பக்கத்தது இடபக் கொடி, இடப்பாகத்துத் திருமேனி கரியது; வலப்பாக த் திருமேனி செம்மை நிறமுடையது. இடப்பாகத்தின் ஆடலுக்கேற்றது குடம் வலப்பாகத்தின் ஆடலுக் கேற்றது கொக்கரையென்னும் வாத்தியமாகும் என்பது இத்திருப்பாடலின் பொருள்.

சிவபெருமான் உயர்த்த கொடியில் எழுதப்பெற்ற இடபமும் அப்பெருமான் உடுத்த கோவணவுடையும் அவ்விறைவனது சென்னியில் அணியப்பெற்று விளங்கும் கொக்கிறகும் அவன் திருவடியிலணிந்த வீரக் கழலும் அவன் மார்பிற் பூசப்பெற்று விளங்கும் திருநீறும் மாலையாக விளங்கும் ஐந்தலையரவும் முடிமேல் விளங்கும் பிறைமதியும் மண நாறும் கொன்றைமலர் மாலேயும் அப்பெருமான் திருக்கையில் விளங்கும் மூவிலைச் சூலமும் ஆகிய இத்திருக் கோலம் எப்பொழுதும் தம் கட்புலனுகத் திகழக் கண்ட சேரமான் பெருமாள் நாயனர் தாம் கண்ட அவ்வழகிய காட்சியை,

கொடிமேல் இடபமுங் கோவனக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தினிறுமை வாயரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவுமென் கண்ணுளெப் போதும் జఅశ3్క என்ற பாடலால் ஏனையோர்க்கும் விளங்க எடுத்துரைக்குந் திறன் படிப்போருள்ளத்தை உருக்குவதாகும்.