பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

பன்னிரு திருமுறை வரலாறு


பட வல்ல அடியார்கள் தங்குதற்கென்றே தாழ் சடை யாளுகிய இறைவன் வஞ்சனை முதலிய குற்றங்களைக் கடிந்து எல்லாவுலகிற்கும் மேலதாகிய வீட்டுலகத்தைத் திருத்தமுற அமைத்து வைத்துள்ளான் என்பார்,

நெஞ்சந் தளிர்விடக் கண்ணிர் ததும்ப முகமலா அஞ்செங் காதலங் கூம்ப அட்டாங்க மடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லார்கட்குத் தாழ் சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான் பெரு வானகமே. (14)

எனப் பாடிப் போற்றுகின்ருர். இத்திருப் பாடலில் இறை வன்பால் நேயமிக்க அடியார்களது இயல்பும் அவர்களுக்கு இறைவன் ஈறிலாப் பேரின்ப வாழ்வை வகுத்தருளிய திறமும் இனிது விளக்கப் பெற்றிருத்தல் அறிந்து இன் புறத் தக்கதாகும்.

சிவபெருமானுக்கு அடியராயினுேர் பெறும் இன்ப நிலையும் அவ்விறைவனது அருள்வழி நில்லாத தீயோர் அடையுந் துன்ப நிலையும் இன்ன வென விளக்குவது,

வானக மாண்டு மந்தாகினியாடி நந்தாவனஞ் சூழ்

தேனக மாமலர் சூடிச்செல்வோருஞ் சிதவல் சுற்றிக்

கான கந் தேயத் திரிந்திரப் போருங் கனக வண்ணப்

பாணிற நீற்றற் கடியரு மல்லாப் படிறருமே. {{2} எனவரும் பாடலாகும் வானுலகத்தையாண்டு ஆகாய கங்கையின் தூய நன் னீரிற் குளித்து அங்குள்ள நந்த வனங்களில் அலர்ந்த தேனிறைந்த நறுமலர்களைச் சூடித் தேவராய்த் துறக்கவின்பங்களே நுகர்பவரும், இவ்வுலகிற் கந்தைத் துணியைச் சுற்றிக்கொண்டு காலிலுள்ள நக ந் தேய ஊர் தோறுந் திரிந்து இாந்துண்போரும் முறையே யாவரெனின், பால் போலும் நிறந்தங்கிய திருவெண்ணிற் றினையணிந்த சிவபெருமானுக்கு அடியராயிைேரும் அவரல்லாத தீயோருமெனத் தெளிதல் வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் ஆகிய வழிபாட்டை மேற்கொள்ளுதற் பொருட்டே இம் மக் கட் பிறவி நமக்கு அளிக்கப்பெற்றுள்ள தென்பதனையும் பெறுதற்கரிய தம்முடம்பினைக் கடவுள் வழிபாட்டிற் பயன் படுத்தாமையால் மனிதர்க்குளதாம் தாழ்வினையும் புலப் படுத்துவது,