பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் ஜாவளுர் క్ట్ర

சொல்லாதன கொழுநா, வல்லசோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம், தேறித்தொழாதகை மண், திணிந்த கல்லாம் நினையாமனம், வணங்காத்தலையும் பொறையாம், அல்லா அவயவந்தானும் மனிதர்க் கசேதனமே, (42) என்ற பாடலாகும். ஞாயிறு திங்கள் விண்மீன்கள் ஆகிய சுடர்ப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் ஆன்மாக்களது அறிவினுள்ளுங் கலந்து நின்று ஒளிதரும் பேரொளிப் பிழம்பாகிய இறைவனது திருப்பெயரைச் சொல்லும் பயிற்சி பெருத மனிதரது நா அவிழ்ச் சுவையின்றித் தமிழ்ச் சுவை யறியாமையால் மண்ணை புழுதற்குரிய கலப்பையின் கண் அமைந்த இருப்புக்கொழுவெனக் கொள்ளத்தக்க தாகும். இறைவன் திருப்பெயரைக் கேட்டலிற் பழகாத செவி உணர்ச்சியற்ற மரமாம். எவ்வுயிர்க்குந் தலைவன் இறைவனே எனத் தெளிந்து தொழாதவர் தம் கைகள் தமக்குரிய தொழிலைச் செய்யும் ஆற்றல் பெருமையின் மண்ணுல் இயன்றனவேயாம். இறைவனை நினைந்துரு காத மனம் தனக்குரிய அன்பின் நெகிழ்ச்சியினைப் பெருமை யால் வலிய கல்லெனவே கொள்ளத்தகும். இறைவனைத் தாழ்ந்து வணங்காத்தலையும் கல்வியறிவின் பயனுகிய பெரு மையை எய்தப் பெருமையின் வெறுஞ்சுமையேயாகும். இங்ங்ணமே இறைவன் திருவுருவினைக்காணும் பயிற்சியில் லாத கண்கள் அப்பெருமானெழுந்தருளிய திருக்கோயில் களைச் சூழ்ந்து வலம்வராத கால்கள் ஆகிய பிற பொறிகளும் தத்தமக்கேற்ற புலன்களைக்கொள்ளும் ஆற்றல் பெருமை யால் அறிவற்றன வெனவே கொள்ளுதற்குரியன என்பது இத்திருப்பாடலின் பொருள். கோளில்பொறியிற் குண மிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை என்ற திருக்குறளுக்குச் சேரமான் பெருமாள் நாயனர் கூறிய சிறந்த விரிவுரையாக இத்திருப்பாடல் அமைந்துள்ளமை நினைந்து மகிழ்தற்குரியதாகும்.

அழியுமியல்பினதாகிய பயனற்ற உடம்பினைப் பேணிப் பாதுகாத்தற் பொருட்டு நாளும் பொய்யே பேசிப் பலருடைய வீடுகள்தோறுஞ் சென்றிரந்து துன்புறுதற்கிட ஞகிய இவ்வுலக வாழ்வில் அழுந்தித் தளராது உய்திபெறு வோம். நெஞ்சே துயர் நீங்கி எழுவாயாக. மு ைைெரு காலத்திற் கடலிற் பரவியெழுந்த கொடிய நஞ்சினையுட் கொண்டு தன் மிடற்றிலடக்கிய இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்துய்தலே இவ்வுலகிற் பெறுதற்கரிய மக்கள்