பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588

பன்னிரு திருமுறை வரலாறு


யாக்கையை நாம் பெற்றுள்ளமையால் அடைதற்குரிய பெரும் பயனும் என்ற மெய்ம்மையை நினக்குச் சொன் னேன் எனச் சேரமான் பெருமாள் தம் நெஞ்சத்திற்குக் கூறும் அறிவுரையாக அமைந்தது,

படிருயின சொல்லிப் பாழுடலோம்பிப் பல கடைச்சென் றிடரு தொழிதும் எழுநெஞ்சமே எரியாடி யெம்மான் கட ருயின நஞ்ச முண்டபிரான் கழல் சேர்தல்கண் டாய் உடரு னுளபய வைசொன்னேனில் வுலகினுள்ளே. (13)

என்ற திருப்பாட்டாகும்.

என் நெஞ்சமே இறைவனது திருவடியைப் பணிவர பாக. அப்பெருமானது மெய்ப்புகழை இசை பொருந்தப் பாடியாடுக. குளிர்ந்த நறுமலரால் மாலை புனைந்து அப் பெருமானுக்கு அணிக சூரியனுடைய பற்களைத் தகர்த்த அவ்விறைவனுக்கே அடிமை செய்யத் துணிக, உடம்பில் திரு நீற்றை நிறையப்பூசி அவ்விறைவனது திருவடித் தொண்டினையே விரும்பிச்செய்க. இங்ங்னஞ் செய்வர யாயின் நல்லன வெல்லாம் நிறைந்த சிவலோக வாழ்வை தினக்குக் காட்டியருள்புரிவான். நின் கவலையை நீக்குக எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,

பணிபதம் பாடிசை யாடிசையாகப் பனிமலரால் அணிய தங் கன்பற்கொள் அப்பனை யத்தவற்கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் துர்த்து நல்ல தணிபதங் காட்டிடும் சஞ்சல நீயென் றணிநெஞ்சமே (10)

என்ற பாடலாகும். பெரும்பொருளைத் தேடிப் பெற்றும் பெருமையால் செயலொழிந்து நின்றும் திரிந்தும் தோயிற் கிடந்தும் மீண்டும் அலைந்து திரிந்தும் வருந்துதற்கு இடஞகிய இவ்வுலக வாழ்க்கையை விட்டொழிப்பாயாக. மாதொரு கூறணுகிய இறைவன் நாம் பக்குவம் பெற ளந்திருந்திய காலத்தே நம்முடைய தீவினைகளைக் களே ந்து அருள்புரிவான் எனத் தம் நெஞ்சத்திற்கு உரைப்பதாக அமைந்தது,

இருந்தன மெய்தியு நின்றுந் திரிந்துங் கிடந்தலந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடுபோக நெஞ்சே மடவாள் பொருந்திய பாகத்துப் புண் ணியன் புண்ணியல்

சூலத்தெம் மான் திருந்திய போதவன் தானேகளையுநந் தீவினையே. ; 17