பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ புன்னிரு திருமுறை வரிாைது

எனது அன்பினை அமைத்தேன். அவனது திருவருட் பண்பினை எண்ணிய அளவே என்னுடல் சிலிர்க்கும் நெகிழ்ச்சியுடையணுயினேன். எல்லாப் பாவங்களை யும் சுட் டெரிக்கும் அருள் வண்ணமாகிய திருவெண்ணிற்றினை யணிந்த சிவபெருமானை வழிபடுதற்கு அடியேன் மேற் கொண்ட நியமங்கள் இவையாகும் எனச் சேரமான் பெரு மாள் நாயனர் மேற்காட்டிய திருப்பாடல்களால் தாம் பெற்ற பேரின்பத்தினை ஏனையோரும் பெற்று இன்புற வழி கூறய திறம் நினைந்து போற்றத் தக்கதாகும்.

இவ்வுலக வாழ்விலும் மறுமை வாழ்விலும் வேண்டு வார் வேண்டுவதே ஈந்தருளும் பேரருளும் பேராற்றலு முடையோன் இறைவன் ஒருவனேயாதலின் அவனை வழி படுவோர்யாண்டும் என்றும் இன்பமே நுகர் வரென்றும் அப்பெருமானை வழிபடாது அவனடியார்களுக்குத் துன்பஞ் செய்யுங் கொடியோர் மீளா நரகத்தில் வீழ்ந்திடர்ப்படுவ ரென்றும் உலகமக்களுக்கு அறிவுறுத்தக் கருதிய சேரமான் பெருமாள் நாயஞர்,

உலகாளுறுவீர் தொழுமின் விண்ணுள் வீக் பணிமினித்தம் பலகாமுறுவீர் நினைமின் பரமனெடொன்ற லுற்றீர் தலகாமலரால் அருச்சிமின் நானாகத்து நிற்கும் அலகாமுறுவீர் அரனடியாாை uலைமின்களே. (14)

என நயமுறக்கூறுகின்ருர், உலகாளும் பெருவிருப்புடை யீர், தும் விருப்பம் ஈடேற வேண்டின் எவ்வுயிர்க்கும் தலை வளுகிய இறைவனை க் கைகூப்பித் தொழுவீராக. வானுலக ஆட்சியை விரும்பியவர்களே இறைவனடிகளில் வீழ்ந்து பணிமின்கள். நாள் தோறும் இவ்வுலகிற் புதிய புதிய இன் பங்களை நுகர விரும்புவீராயின் இறைவனை இடைவிடாது நினைந்து போற்றுமின்கள். ஈசனேடு பிரிப்பின்றியொன்றி இன்புறக் கருதுவீராயின் நறுமலர்களால் அப்பெருமானை நாடோறும் அருச்சித்து வழிபாடு செய்வீராக. நாளும் மீளா நர கினை யடைந்து இடர்ப்பட விரும்புவீராயின் இறை வனடியார்களை நாளுந் துன்புறுத்துவீராக என்பது இதன் பொருள். சிவனடித் தொண்டிற்ை பெருஞ்சிறப்பெய்திய சேரமான் பெருமாள் நாயனர் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற அருளுேக்கத்துடன் உலக மக்களை நோக்கிக் கூறிய அறிவுரையாக அமைந்தது,