பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் தாயகுச் 594

கூறுமின் ஈசனைச் செய்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா ஏறுமின் வானத் திருமின் விருந்தா விமையவர்க்கே. (70)

என்ற திருப்பாட்டாகும். ஈசனது பொருள் சேர் புகழை நாவாரக் கூறுமின். அவனுக்கே அடித்தொண்டு செய்மின். அவனது திருமேனியைக் கண்டு கண் குளிரப் பெறுமின், சிந்தையை ஒரு நெறியில் வைத்துத் தெளிவுபெறுமின். சிவனே முழுமுதற் கடவுளென்று தெளியுங்கள். சினத் தைத் தணிமின். உலகியற் பொருளிற் செல்லும் அவாவை அகற்றுமின். துக்கத்தை நீக்குமின். இங்குக் கூறிய இந்நியமங்களையே வழியாகக் கொண்டு துறக்கஞ் சென்று இன்பமே நுகருந்தேவர்க்கு விருந்தினராகத் தங்கி அவர் களால் உபசரிக்கப் பெறுவீராக என்பது இதன் பொருளா கும். இங்ங்னமே இப்பொன்வண்ண தந்தாத்தியின் பொருள் நலங் காணப் புகின் மிகவிரியுமாதவின் இவ்வள வில் அமைகின்ருேம்.

தீவினையின் பயனகத் தப்பி உய்தற்கியலாத கொடிய நரகத்தையடைந்து துன்புற்ருலும், அன்றி நல்வினை காரணமாக அத்துன் பத் தொடர்பினின்று நீங்கிளுலும், மீளவும் இவ்வுலகிற் போந்து ஊர்வன நடப்பன பிறப்பன பறப்பனவாகிய ஆற்றலற்ற தாழ்ந்த பிறவிகளிற் பிறந் திறந்து வருந்தினுலும், இவ்வரச வாழ்வில் நெடுங்காலம் நிலை பெற்றிருந்தாலும், உயிர்களுக்கு நல்லறிவு வ்ளர நான் மறைகளை அருளிச் செய்தவனும் சாதல் நீங்க நஞ்சினை யுண்டாக்கிய கரிய திருமிடற்றையுடையவனுமாகிய இறை வனுடைய திருவடிகளே மறவாது நினைந்து போற்றுத லொன்றே இறைவன் பால் வேண்டத்தகும் முடிவான வர மாகுமென்று எண்ணியொழுகியவர் சேரமான் பெருமாள் நாயஞர். இச்செய்தி,

பொய்யா நரகம் புகினுந் துறக்கினும் போந்து புக்கிங் குய்யா வுடம்பிளுெ டூர்வ நடப்ப பறப்ப வென்று நையா விளியினும் நானில மாளினும் நான் மறைசேர் மையார் மிடற்ரு னடிமறவா வரம் வேண்டுவனே. (98)

எனவரும் அவரது வேண்டுகோளால் இனிது புலளுதல் காணலாம். எந்நிலையிலிருந்தாலும் இறைவன் திருவடியை