பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் క్షీఖీ

மானை நோக்கித் தவஞ் செய்தனர். இறைவன் அவர்களுக்கு முன்னே தோன்றி நாம் மண்டோதரிக்கு அருள் செய்தற் பொருட்டுக் கடல் சூழ்ந்த தென்னிலங்கைக்குச் செல்கின் ருேம். நீவிர் இவ்விடத்திலேயே இருமின் ' எனக் கூறித் தம் கையிலுள்ள அரும் பொருள் நூலாகிய திருமுறையை அறிஞர்களாகிய முனிவர்களிடம் தந்தருளினர். முனிவர்கள் இறைவனை வணங்கி நின்று, எம்பெருமானே, தாங்கள் திவினையாளராகிய அரக்கர்கள் வாழும் இலங்கைக்குச் செல் லுதல் தகுமோ என வினவினர். இலங்கை மன்னளுகிய இராவணன் நம் திருமேனியைத் தீண்டும் பொழுது இங் குள்ள பொய்கையின் நடுவே தீப்பிழம்பு தோன்றும் ' எனக் கூறிச் சிவபெருமான் இலங்கைக்குச் சென்று மண்டோதரி மாளிகையையடைந்து அவள் அன்புடன் செய்த பூசனையை யேற்று மகிழ்ந்திருந்தார். அந்நிலையில் மண்டோதரி மாளி கைக்கு இராவணன் சென்ருன். அப்பொழுது சிவபெரு மான் இளங்குழந்தையாக உருமாறினர். குழந்தையைக் கண்ட இராவணன், தன் மனைவியை நோக்கி இக்குழந்தை எங்கிருந்து வந்தது?’ என வினவிஞன். தவப்பெண் ணுெருத்தி இக்குழந்தையை என்னிடந் தந்து டோயிளுள் என்ருள் மண் டோதரி. வனப்புமிக்க அக்குழந்தையை அன்புடன் அனைத்தெடுத்துத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டான் இராவணன்.

இங்ங்னம் சிவபெருமாளுகிய அக்குழந்தையை இரா வணன் தொட்ட அளவிலே திருவுத்தரகோசமங்கை யிலுள்ள பொய்கையிலே முற்கூறிய வண்ணம் தீப்பிழம்பு தோன்றியது. அது கண்டு மன நடுக்கமுற்ற தவமுனிவ ரனைவரும் அத் தீயிற் பாய்ந்தனர். அம்முனிவர்களுள் ஆண்டில் இளையவரும் அறிவில் முதியவருமாகிய மாணிக்க வாசகரென்னும் வேதியர் இறைவன் தந்தருளிய அருள் நூலைப் பாதுகாத்தற் பொருட்டுத் தாம் மட்டும் அத் தீயிற் புகாமல் நெடுநாள் அப்பொய்கைக் கரையிலேயே தங்கியிருந்தார். இவர் இங்ங்னமாக, பார்வதி தேவியார் முதுமைக் கோலமுடைய தவச் செல்வியாக மண்டோதரி மாளிகையை யடைந்து இளங் குழந்தையாகிய சிவபெரு மானைப் பெற்றுக்கொண்டு திரும்பினர். பின்பு சிவபெரு மான் உமாதேவியாருடன் திருவுத்தரகோசமங்கையின் பொய்கைக் கரையை யடைந்து தழலிற் புகுந்த முனிவர்