பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுர் 597

தலைமகனது பேரன்பினைத் தலைமகளுக்கு எடுத்து உரைத்துக் குறைநயப்பிக்கக் கருதிய தோழி. இதனைத் தலைமகளுக்கு வெளிப்படச் சொல்வேனுயின் இவள் மறுக்கவும் கூடுமெனக் கருதி, "ஆரூர்ப்பெருமான் றன் அரும்பெறல் மகளுகிய முருகவேளைப் போன்று பேரழகு உடையணுய் வேலேந்திய ஒருவன் நம் புனத்தின் கண் பலகாலும் வந்தொழுகுகின்ருன், பகற்பொழுது கழிந்தா லும் இப்புனங்காக்குந் தொழிலை விட்டு நீங்காதுள்ளான். அவன் திறத்து நாம் செய்யத்தக்கது யாது” எனத் தலைமகளோடு உசாவி, அவள் உள்ளக் குறிப்பினே அறிவதாக அமைந்தது,

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்கி எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர் முன்னஞ்சேர் மொய்கழலான் முக்களுன் நான்மறையான் மன்னுஞ்சேய் போலொருவன் வந்து, என்ற பாடலாகும்.

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டு தண் டேன்பருகித் தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர் மாதே புனத்திடை வாளா வருவர் வந் தியாதுஞ் சொல்லார் யாதே செயத்தக் கது.மது வார் குழ லேந்திழையே. எனவரும் திருச்சிற்றம்பலக் கோவைச் செய்யுள் குறிப் பறிதலென்னும் துறையில் மேற்காட்டிய செய்யுளின் விளக்கமாய் அமைந்திருத்தல் காணலாம்.

தலைமகன் தலைமகளை ஒருவரும் அறியாவாறு உடனழைத்துச் சென்றவழிச் சுரத்தருமை நினைந்து செவிலித்தாய் வருந்துகின்ருள். புனத்தில் வாழும் மயில் போலுஞ் சாயலையும் மலரணிந்த கூந்தலையும் உடைய என்மகள், தன் மனைப் பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சியடையாதவளாய், அயலாளுெருவன் தன் காதல ஞக அவன் பின்னே ஞாயிறு நடு நின்று கடுவெயிலெறிப்பச் செல்வோரது உடல் நிழல் அடியகத்தே மறையும் அனல் வீசும் பாலை நிலத்திடையே கொடுந்தொழில் புரியும் வேடுவரது துடியோசைக்கு அஞ்சி மெய்நடுங்குந் தன்மை யளாகி முள்ளுடைய ஈந்தும் உலர்ந்த அடியுடைய இலவ மரமும் விளா மரமும் பரவிய வெளியிடத்தே கடுங் குரலுடைய நாய்களைக் கட்டிய கயிற்ருல் உராயப்பட்டுத் தேய்ந்த கம்பத்தின் மேல் மரைமான் தோலால் வேயப்