பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598

பன்னிரு திருமுறை வரலாறு


பெற்ற சிறு குடிசையிலே வாழும் நரைமூதாட்டியராகிய

மறத்தியர்க்கு விருந்தாயினள் போலும் " எனச் செவிலி

நினைந்திரங்குவதாக அமைந்தது

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை மனை மலி செல்வ மகிழ ளாகி ஏதில ைெருவன் காதலனுக விடுசுடர் நடுவணின் றடுதலி னிழலும் அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ மெய்விதி செறியுஞ் செவ்வியளாகி முள்ளிலை யீந்து முளிதா ளிலவமும் வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கிற் கடுங்குரற் கத நாய் நெடுந்தொடர் பிணித்துப் பாசந் தின்ற தேய்கா லும்பர் மரையதள் வேய்ந்த மயிர்ப்புன் குரம்பை விரிநரைக் கூந்தல் வெள் வாய் மறத்தியர் கிருந்தாயினள் கொல் தானே, திருந்தாக் கூற்றெனப் பெயரிய கொடுந்தொழி லொருவன் ஆற்றல் செற்ற அண்ண லாரூர்ச் செய்வளர் கமலச் சீறடிக் கொவ்வைச் செவ்வாய்க் குயின்மொழிக் கொடியே.

என்ற பாடலாகும். இஃது அகநானூற்றிற் குடவாயிற் கீரத்தனர் பாடிய 315-ம் பாடலோடு ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும்.

நீர்மலி வேணியனுகிய இறைவனுல் தலையளிக்கப் பெற்ற மதிபோலும் முகத்தினை யுடைய என் மகள் என்னுடன் மலரணையிலே துயிலுங்கால் அவ்வணையிற் பிரிந்து இடப்பக்கமாக யான்மாறினும் அஞ்சுமியல் பினள். அத்தகையவள் இப்பொழுது நடத்தற்கரிய வெம்மை மிக்க பெரிய சுரத்திடையே சென்றனள். என் மகளுக்கு நேர்ந்த இத்துயரங்கள் அவளால் பொறுக்கத்தக்கன அல்லவே' என மகட்போக்கிய செவிலித்தாய் வருந்து வதாக அமைந்தது,

தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போன்முகத்து மடப்பான் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாகம்பிரீஇ இடப்பாற் றிரியின் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால் படப்பாலன வல்ல வாற்றமியேன் தையல் பட்டனவே.

என்ற பாடலாகும்.