பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 808

பொருள் கூறிய நச்சிர்ைக்கினியர், தோற்றமுமென்றது, அக்காமம் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக் கத்தை; அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் : எனறும,

வழக்கொடு சிவணிய வகைமையான "

எனவரும் அடுத்த சூத்திரத்திற்கு, ' கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீருகக் கிடந்தனவெல்லாம் சான் ருேர் செய்த புலனெறி வழக் கோடே பொருந்தி வந்த பகுதிக் கண்ணேயான பொருள் களாம் ' என்றும், ! இனி ஊரொடு தோற்றமும் பரத்தை

பொருளும் விளக்கமுங் கூறியுள்ளார். எனவே உலாவா கிய இப் பிரபந்தம் மக்களைப் பொருளாகக் கொண்டு பாடப் பெறுவதுடன் தெய்வத்தைப் பொருளாகக் கொண்டு பாடப் பெறுதலு முண் டென்பதும், இதன் கண் கூறப்படுங் கைக் கிளைச் செய்திகள் பரத்தையர்க்கு அன்றிக் குலமக எளிர்க்குக் கூறப்படாவென்பதும் நச்சிர்ைக்கினியர் கருத்தா தல் நன்கு பெறப்படும்.

இவ்வாறு பாடப்பெற்ற உலாப் பிரபந்தங்களுள்ளே தொன்மையும் பொருட் சிறப்பும் வாய்ந்தது, சேரமான் பெருமாள் நாயனர் பாடியருளிய திருக்கயிலாய ஞான வுலா வாகும். நம்பியாரூரர் சேரநாட்டின் தலைநகராகிய கொடுங்கோளுரிலுள்ள திருவஞ்சைக் களமென்னுந் திருக் கோயிலிலே சிவபெருமான வழிபட்டுத் திருப்பதிகம் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், தேவர்கள் சிவபெருமா ஞல் அனுப்பப்பெற்ற வெள்ளையானையோ டு அங்கு வந்து சுந்தரரைப் பணிந்து திருக்கயிலைக்குப் புறப்படும்படி வேண்டிக் கொண்டனர். இறைவன் பணித்த வண்ணம் வெள்ளே யானையின் மீதமர்ந்து கயிலேக்குப் புறப்படும் சுந்தரர், தம் தோழராகிய சேரமான் பெருமாளே உள்ளத் தால் நினைக்க, திருமஞ்சன சாலையில் நீராடிக் கொண்டு இருந்த சேரமான் பெருமாள் நாயனுர், அந்நினைவினை யோகக் காட்சியால் விரைந்துணர்ந்து தமது குதிரைக்குத் திருவைந்தெழுத்தினை யுபதேசித்து அதனை விரைந்து செலுத்தினர். வான்வழியே செல்லும் அக் குதிரை, சுந்தரரைக்கொண்டு செல்லும் வெள்ளை யானையை வலம்