பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

பன்னிரு திருமுறை வரலாறு


வந்து அதன் முன்னர்ச் சென்றது. இருவரும் கயிலை மலையை யடைந்து சிவபெருமானைப் பணித்து போற்றினர். சேரமான் பெருமாள் நாயனர் இறைவனது திருவுலாக். காட்சியைப் பொருளாகக் கொண்டு தாம் வழியிடையே பாடிவந்த திருவுலாப் புறமாகிய செந்தமிழ்ப் பனுவலைக் கயிலாயத்தில் இறைவன் திருமுன்னர் அரங்கேற்றினர் அங்கு உடனிருந்து கேட்டு மகிழ்ந்த மாசாத்தனர் அப் பிரபந்தத்தை மனத்திற் கொண்டு சோழ நாட்டில் திருப் பிடவூரில் உலக மக்களறிய வெளிப்படுத்தி யுதவினர் என் பது வரலாறு. திருக்கயிலாய ஞான உலாவாகிய இப்பிர பந்தத்தின் தோற்றத்தைக் குறித்து வழங்கும் இவ்வர லாற்றினைச் சேக்கிழார் திருத் தொண்டர் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

சேரமான் பெருமாள் பாடியருளிய இவ்வுலா, தமிழி லுள்ள உலாப் பிரபந்தங்க ளெல்லாவற்றிற்கும் காலத் தால் முற்பட்டுத் தோன்றிய மூல இலக்கியமாதலின், ஆதி யுலாவென வழங்கப் பெறுவதாயிற்று. இரட்டைப் புல வர்கள் பாடிய ஏகாம்பர நாதருலாவில் பொன் வண்ணத் தந்தாதி ஆதியுலாவோ டமைத்தானும் " என இந்நூலா சிரியராகிய சேரமான் பெருமாள் நாயனர் போற்றப் பெற்றுள்ளார். இத்தொடரில் இவ்வுலா ஆதியுலா என்ற பெயராற் குறிப்பிடப் பெற்றமை காணலாம். காலத் தால் முற்பட்டுத் தோன்றிய இவ்வுலாவினை யொத்த சுவை நயமுடைய மற்ருேருலா இதுகாறும் தோன்றவில்லை யாதலின் இப்பிரபந்த வளர்ச்சியில் இவ்வுலாவே முடிந்த நிலையில் விளங்குவதென்பதும், இப்பனுவலை வழி நடையில் விரைந்து பாடியருளிய சேரமான் பெருமாள் ஆசுகவிப் புலவராவரென்பதும் ஆகிய உண்மையினை ஆதியந்த வுலா ஆசு பாடிய சேரர்' எனவருந் தொடரால் அருணகிரி நாதர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இதனைத் திருவுலாப்புறம் எனக் குறிப்பிடுவர் சேக்கிழாரடிகள். இனி ஆதியுலா என்பதற்கு ஆதி பகவனகிய இறைவனைத் தலைவனுகக்கொண்டு பாடப்பெற்ற உலா எனப் பொருள் கூறுதலும் உண்டு.

கைக்கிளைப் பொருள்பற்றிக் கலிவெண்பாவில் அமை தற்குரிய @ಮನ್ನುrಕ செய்யுள் அடிவரையறை யின்றி இரண்டுறுப்பாயும் ஒருறுப்பாயும் பாவும் பொருளும் வேறு