பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயனுள் 6{}}

புகழ்ப்பாடலைப் பாட த்தொடங்குமளவில் பரஞ்சோதியாகிய சிவபெருமான் மால் விடைமேல் உலாவருதலைக் கண்டாள். தான் பாடத்தொடங்கிய இனிய இசையினையும் தான் பிறந்த குடிப்பிறப்பின் உயர்வினையும் இவ்விரண்டையுங் கெடாது பேணுமியல்புடைய பெருமைவாய்ந்த தமிழ்ப் பாடலேயும் இசைத்தற்குரிய கருவியாகிய வீணையினை யுங் கைநெகிழ விட்டாள். தன் தோழிய ரை நோக்கிப் பொன்னனையீர், இன்றன்றே காண்பது எழில் நலம் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கு என்று சொல்லிப் பெருவேட்கையுடையளாய்த் தன்னை யறியாது நெகிழும் உடையைச் செறியவுடுக்கும் ஆற்றலற்ற வளாய்க் கழலுமியல்பின வாகிய வளையல் கழலாதபடி இறைவனைத் தொழுது காப்பாற்றிக்கொண்டு தனது உடல் வனப்பினை யிழந்தாள்.

தெரிவைப் பருவத்தாளொருத்தி, ஆராவமுதமே ஒருருவெடுத்து வந்தாலொத்த சுவைக்கினிய வடிவினை யுடையாள். செங்கழுநீர்ப் பட்டுடுத்துக் கழு நீர் மாலையை யணிந்து தன் தோழியர்களுடன் விளையாடிக்கொண்டிருக் கின்ருள். அந்நி.ே யில் தோற்றம் நிலை யிறுதியாகிய முத் தொழிலுக்கும் காரணமாய் நின்ற திருவடியையுடைய சிவ பெருமான் உலாவருகின்ருன். அவனது சடைமுடியைக் கண்ட தெரிவை அவனைக் காமுறுகின் ருள். ' என் உயிரி னுஞ்சிறந்த குணமாகிய நாளுர் இனி என்னை விட்டு விரைவிற் செல்க, அறிவு நிறை முதலிய நலத்தார்க்கு என் பால் இடமில்லை. தன்னைத் தான் கொண்டொழுகுத லாகிய பெருமை என்னை விட்டொழிக, எனது மேனி வனப்பும் ஒழிதற்குரியதே. நீங்காமற் பேணத்தக்க நற் பண்புகள் அகல நீங்குக. குற்றங்களே வம்மின். நன்மைக்கு உறைவிடமாகிய தோழியர்களே என்னை மறவாது நினை யுங்கள் ' என்று கூறித் தேவர்களுக்கெல்லாந் தலைவ கிைய சிவபெருமானே இங்கு உலாப்போந்தாளுயின் அவ்விறைவனும் தானணிந்த கொன்றை மலர் மாலையை எனக்கு அருளாது போவானுயின் அவனைக் கண்டால் இன்னது செய்வதென்பதை யான் நன்கறிவேன்' எனச் சொல்லிக் கைசோர்ந்து தன் வனப்பினை யிழந்தாள்.

1. இருபத்தாறு வயதுமுதல் முப்பத்திரண்டு வயதுவரையுள்ள பெண்பாற் பருவம் தெரிவைப் பருவம் எனப்படும்.

39