பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610

பன்னிரு திருமுறை வரலாறு


பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண் ஒருத்தி கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும், ஒனடொடி கண்ணே யுள வென்று பண்டு திருவள்ளுவர் கூறிய பொருளுரைக்கு இலக்கியமாகத் திகழ்பவள. அவள் பண்கவருஞ் சொல் லாராகிய தன் தோழியர்கள் போற்ற வீற்றிருந்து,

கண்ணவனை யல்லது காணு செவியவன தெண்ணருஞ்சீ ரல்ல திசைகேளா-அண்ணல் கழலடி யல்லது கைதொழா அஃதால் அழலங்கைக் கொண்டான் மாட் டன்பு.

என்றதோர் அழகிய வெண்பா வினுல் இறைவனைப் போற்றி அப்பாடலின் பொருளைத் தன் தே ழியருக்கு விரித்துரைத்துக் கொண்டு இருக்கின் ருள். அப்பொழுது கறைக்கண்டனுகிய சிவபெருமான் மாட மறுகில் உலா வந் தருளினன். அவனைக் கண்ட அவள் அண்ணலே நினது திருவுலா விற் பல பருவத்து மகளிரும் கண்ணுற் பருகிய நின் திருடிேனி யழகாகிய எச்சிலை எங்களுககு ஊட்டக் கருதி இங்கு வந்தாய். கைவளை யலைக் கவர்ந்தாய். மயக் கத்தையும் தீராத் துயரத்தையும் தந்தாய். இது நினக்கு தகுதியாமோ " என வருந்தி முறையிட்டுச் செயலற்று உடல் வெளுத்து மயக்கமுற்ருள்.

மேகங்கள் தவழும் நீண்ட சிகரங்களையுடைய திருக் கயிலைமலை யில் வீற்றிருந்தருளும் பிறை தவழ் செஞ்சடையா கிைய சிவபெருமான் திருவுலாப் போந்த தெரு, பண்ணின் தன்மை வாய்நத இனிய மொழிகளைப் பேசுமியல்பினராகிய மகளிரின் பேராரவாரத்தை யுடையதாயிற்று. என்பது இவ்வுலாவின் தொகைப் பொருளாகும்.

எல்லாம் வல்ல இறைவனைத் தலைவனுகவும் அவனருள் வேட்ட மன்னுயிர்களை அத் தலைவன் பாற் காதல் கொண டு மயங்கிய மகளிராகவும் வைத்துப் பாடப்பெற்றது திருக் கயிலாய ஞான வுலா வெனனும் இப்பிரபந்தமாகும். இதன் கண் எழுவகைப் பருவத்து மகளிரென்றது எழு வகைத் தோற்றத்தனவாகிய உயிர்களை யெனவும், பேதை முதல் தெரிவை பீருகச் சொல்லப்பட்ட அறுவரும் ஓரறி

2. முப்பத்து மூன்று வயது முதல் நாற்பது வயது வரையுள்ள

பருவத்தினள் பேரிளம் பெண் எனப்படுவாள்.