பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் நாயஞர் 舒其篮

வுயிராகிய புல் முதல் ஆறறிவுயிராகிய மக்கள் ஈருகவுள்ள அறுவகை யுயிர்களெனவு , பேரிளம் பெண் னென்றது தேவர் முனிவர் முதலிய சிறப்புடை யுயிர்களை யெனவும், எல்லா வுலகங்களை யும் தோற்றுவித்து இயக்கியருளும் பேரருளாளனுகிய இறைவனது அருமையி லெளிய அழகில் எல்லா வு பிர்களும் திளைத்தின்புறும் மன நிலையே இவ் வுலா விற் சிறப்பித்துரைக்கப்பட்ட பொருளெனவும் அறிவ னுாற்பொருள் பற்றிய விளக்கங் கூறுவர் சான்ருேர்.

தெருவில் உலாப் போந்த தலைவைெருவனைக் கண்டு காமுற்று வருந்திய எழுவகைப் பருவத்து மகளிரது மன நிலையினை விரித்துரைப்பதாகிய இவ்ஸ் லாவில், அவ்வப் பருவத்து மகளிரது பருவ நிலைக்கேற்ற உடல் வனப்பும் உடை வகையும் அணிவகைகளும் விளையாட்டு முதலிய தொழிற்றிறமும் உள்ளவாறு விளக்கப் பெறுதலும், அம் மகளிரது உரையாடல் வாயிலாக அவர்களது மன வளர்ச்சியை உய்த்துணரச் செய்தலும், ஏழு பருவத்து மகளிருள்ளத்திலும் அத்தலைவனது பேரழகு நிலைபெற்ற தெனக் கூறு முகமாகப் பாட்டுடைத் தலைவனது தன் னிகரில்லாத் தலைமைப் பண்பினை இனிது விளக்குதலும் ஆகிய இந் நலங்கள் யாவும் அமைதல் வேண்டுமென்பது இவ்வுலாப் பிரபந்தத்தைத் தோற்றுவித்த தமிழ்ச் சான்ருே ரது புலமை நோக்கமாகும். இந் நோக்கம் சேரமான் பெருமாள் நாயனர் பாடிய ஆகியுலாவாகிய இவ்விலக்கியத் தால் இனிது நிறைவேறியுள்ளமை காணலாம். இவ் வுலாவில்,

" திருமாலு நான்முகனுந் தேர்ந்துணர தன் றங்

கருமா லுறவழலாய் நின்ற-பெருமான் பிறவாதே தோன்றின்ை காணுதே காண் பான் துறவாதே யாக்கை துறந்தான்-முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலா த கலியான் ஊழா லுயராதே யோங்கினன்-சூழொளி நூல் ஒதா துன ர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாது மனுகா தணுகிய என் -ஆதி அரியாகிக் காப்பான் அயஞய்ப் படைப்பான் அரஞ யழிப்பவனுந் தானே-பரயை தேவ ரறியாத தோற்றத்தான் தேவரைத் தான் மேவிய வாறே விதித்தமைத்தான்- ஒவாதே