பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 岔盘臀

மகளிர்க்கியல்பு ஆமாறுபோல இயற்கையில் மணம் வீசுங் கூந்தல் கவுரிக்கு உண்டென்பதனை யாரறியார் என வினவிஞர். இம்மொழிகளுக்கு விடை கூற அறியாத நக்கீரர் இறைவரது நெற்றிக் கண்ணழலால் தமக்குள தாகிய வெப்பத்தைப் பொறுக்கமாட்டாது பொற்ருமரைத் தடாகத்திற் போய் வீழ்ந்தார். தருமி தனக்குரிய பொற் கிழியைத் தடையின்றிப் பெற்றுச் சென்றனன். நக்கீரரது துன்பத்தினைக் கண்டு ஆற்ருெளுத் துயரமடைந்த சங்கப் புலவர்கள் திருவாலவாயிறைவரை வணங்கி நின்று, தையல்பாகனே, நக்கீரன் அறியாமையால் நின் முன்னர்ப் பிழைபடப் பேசின்ை. திருக்கயிலையும் திருக்காளத்தியும் தேவரீர் அன்புடன் வீற்றிருந்தருள் புரியும் திருத்தலங்க ளெனத் தெரிந்து இப்பொழுது அவ்விருதலங்களையும் போற்றி ஒரந்தாதி பாடியுள்ளான். எங்கள் பெருமான கிய நீ அவனது பிழை பொறுத்து அருள் புரிதல் வேண்டும்’ எனப் பதவிப் போற்றி ர்ைகள். அவர்களது வேண்டு கோளுக்கிரங்கிய இறைவர் அங்கற்கண்ணியம்மை யொடும் பொற்ருமரைத் தடாகத்தை அடைந்தார். சொல்லும் பொருளுமே ' என்ற தொடரை முதலாகக் கொண்டு நக்கீரர் பாடிய கயிலைபா தி காளத்தி பாதி யந்தாதியைச் சேவிமடுத்து மகிழ்ந்து அருள்தருகை கொடுத்து அவரைக் கரையேற்றினுர். நெற்றிக்கண் ணழ லாலுற்ற அவரது உடல் வெப்பத்தையுந் தீர்த்தருளினர். இங்ங்னம் தமது உடல் வெப்பத்தைத் தீர்த்தருளிய ஆல வாயிறைவரை அகங்குழைந்து வழிபடுதலே நாடொறும் செய்தற்குரிய நியமமாகக் கொண் டொழுகினர் நக்கீரர். அவரது அறியாமை யகற்றி நற்பொருளை யுபதேசிக்கத் ருவுளங் கொண்ட ஆலவாயிறைவர், பொதியமலையில் வாழும் அகத்திய முனிவரையழைத்துத் தமிழியல் நூற் பொருளை அவருக்கு அறிவுறுத்தி, இப்பொருளை நக்கீர னுக்கு உணர்த்துக' எனப் பணித்தருளினர். அகத்திய முனிவரும் தாம் இறைவன் பாற் கேட்ட தமிழியல் நுட்பத்தை நக்கீசருக்கு உபதேசித்தருளினர்.

அகத்தியர்பால் தமிழுணர்ந்த நக்கீரர், சங்கப் புலவர் மதிக்க வாழும் நாளில், இறையனாருளிய அகப்பொருள் நூலுக்கு மெய்யுரை தந்தருளும்படி புலவர்கள் இறைவனை வேண்டினர்கள். இறைவன் பணித்தவண்ணம் வணிக