பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 619

கயிலைபாதி காளத் தி பாதி யந்தாதி யென்னும் பிரபந் தத்தைப் பாடி இறைவனைப் போற்றினர் என்னும் இச்செய்தி,

அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் வாவியிற் கேட்ட காவியங் களத்தின ன் (52) எனக் கல்லாடச் செய்யுளிலும் இடம் பெற்றுளது.

இறைவன் தருமியின் பொருட்டு நன்பாட்டுப் புலவ ஞகச் சங்கமேறிப் பொற் கிழி வாங்கித்தந்தருளினுர் என்ற செய்தியினை,

நன் பாட்டுப் புல வஞய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழிதருமிக் கருளிளுேன் காண்

எனத் திருநாவுக்காசடிகளார் குறிப்பிட்டுப் போற்றி யுள்ளார். சங்கத்தொகை நூலாகிய குறுந்தொகையுள் இரண்டாவது செய்யுளாகக் கோக்கப்பெற்ற கொங்கு தேர் வாழ்க்கை யென்ற செய்யுளே இறைவன் தருமியின் பொருட்டுப் பாடித்தந்த செய்யுளென்பது கல்லாட நூலாசிரியர் கருத்தாகும்.

பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்கூறிப் பொற்குவை தருமிக் கற்புட னுதவி யென்னுளங் குடி கொண் டிரும் பய னளிக்குங் கள்ளவிழ் குழல்சேர் கருணை யெம்பெருமான் (கல் - 1) என வருங் கல்லாடச் செய்யுளடிகளில் இக்கருத்து விரித்துரைக்கப்பெற்றமை காணலாம்.

நக்கீரரைப் பற்றிய இக்கதை பிற்காலத்தில் மேலும் சில புனைந்துரைகளைப் பெற்று வளர்வதாயிற்று.

(4) சிவப்பிரகாச சுவாமிகள் கூறுவன

உமாதேவியாரது கூந்தலுக்கும் இயற்கை மணமில்லை யென நக்கீரர் தருக்குற்றுப்பேசியது கண்டு சினமுற்ற புலவராகிய சிவபெருமான், நக்கீரரை நோக்கி, மறை களில் மணங் கமழ் குழலாஸ் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் உமாதேவியாகிய இறைவியின் கூந்தலை நீ பழித்தமையால் குட்டநோய் கொண்டு அலைந்து வருந்துக ! என வெகுண்டுரைத்தனர். அதனைக் கேட்டு நடுக்கமுற்ற