பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 62.É.

என் அறியாமை யாலுளதாகிய குட்ப நோய் இறைவன் பணித்த வண்ணங் கயிலையைக் கண்டாலன்றித் திராது, பெரும் பெயர் முருகனுகிய நீ எளியேற்குத் திருக்கயிலை யைக் காட்டி என துபிணியைத் தீர்த்தருளல் வேண்டும் ” எனக் குறையிரந்தார். அவரது வேண்டுகோட்கிரங்கிய முருகப்பெருமான், அவரைநோக்கி, எந்தையாகிய சிவ பெருமான் இன்ன திசையிலுள்ள கயிலையைக்கண்டு வழி படுக என நி ைக்குத் திசை கூறிக் குறி பிடாமையால் நீ தென் கயிலே யாகிய திருக்காளத்தியைக் கண்டாலும் நினது குட்டநோய் தீரப்பெறுதல் உறுதி. ஆகவே இங்குள்ள குளத்தில் மூழகித் தென் கயிலையைக் கண்டு நோய் நீங்கி இன்புறுவாயாக எனப் பணி த்தருளினுன் முருகப் பெருமான் பணித்தவண்ணம் நக்கீரர் அங்குள் ள தடாகத் தில் மூழ்கித் தென் கயிலையாகிய திருக்காளத்தியிற் பொன் முகலியாற்றில் எழுந்தார். நோய் நீங்கித் துய உடம்பு பெற்ற நக்கீரரது உள் ளத்திலே கயிலேவேறு காளத்தி வேறு என்னும் வேற்றுமை நீங்கிக் காளத்தியே கயிலை யாகத்தோன் றினமையாற் கயிலை பாதி காளத்திபாதி அந் தாதி யென் னுஞ் செழுந் தமிழ் பாடி இறைவனைப் போற்றி ஞர். அந்நிக் யில் இறைவன் அம்மையப்பணுகக் காட்சி தந்து என்றும் பிரியாது திருவடி நீழலில் இன் புற்றுறையும் பேரானந்தப் பெருவாழ்வை அவர்க்கு வழங்கியருளினுன் என்பது பிற்காலத்தில் தோன்றிய மற்ருெரு கதையாகும், இக்கதை சீகாளத்தி புராணம் நக்கீரச் சருக்கத்திற் கூறப் பெற்றுளது. இது பெரும் பற்றப் புலியூர் நம்பிதிருவிளை யாடலுக்கும் பரஞ்சோதி முனிவர் திருவிளே யாடலுக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும்.

(5) கிரம்ப அழகிய தேசிகர் கூறுவன சங்கப்புலவராகிய நக்கீரர் சிவபெருமான் பாற் பேரன் புடையராய் நாடோறும் திருப்பரங்குன்றத்தை யடைந்து சரவணப் பொய்கையில் நீராடித் திருவைந் தெழுத்தோ திச் சிவபூசை செய்து மதுரைக்கு வருதலை நியமமாகக் கொண்டிருந்தார். அவர் சிவபெருமா சினுரு வ ையே வழிபடு தெய்வமாகக் கொண்டு அப்பெருமானை யும் அவனருள் பெற்ற பாண்டியனையுமன்றிப் பிற தெய்வங் களையும் மக்களை யுங் குறித்துச் செய்யுள் பாடுவதில்லை யென்ற உறுதியுடையராய் ஒழுகினர். அதுகண்ட முருகப்