பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622

பன்னிரு திருமுறை வரலாறு


பெருமான் நக்கீரர் தம்மையுணர்ந்து தமிழ்ப்பாடல் பாடு தற்கேற்ற சந்தர்ப்பமொன்றை யுண்டாக்கும் படி அண்டாபரணன் உக்கிரன் ஆகிய யூத கணத் தலைவர் களுக்குக் கட்டளையிட்டருளினர். என்றும்போல ஒருநாள் நக்கீரர் திருப்பரங்குன்றத்தினை யடைந்து சரவணப் பொய்கையில் நீராடி அதன் கரையிலுள்ள அரசமரத்தின் நீழலிலே திருவந்தெழுத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள பூதமொன்று அரசமரத் திலுள்ள இலை யொனறைக் கிள்ளியெறிந்தது. அவ்விலை நீரிற் பாதியும் நிலததிற்பாதியுமாக விழுந்தது. நீரில் மிழ்ந்திய பகுதி மீளுகவும் நிலத்திற்படிந்த பகுதி பறவையாகவும் மாறி அவ்விரண டும ஒன்றையொன்று யிழுத்துக்கொண்டு துன் புற்றன. அவற்றின் துயரததைக்கண்டு மனம் பதைத்த நக்கீரர், அவ்விரண்டையும் பிரித்துவைக்க எண்ணி நகத்தாற்கிள்ளி விலக்கினர். அவ்விரண்டும் பதைத்துப் புர ைடு அப்பொழுதே இறந்துபோயின. அந் நிலை பில் அண்டாபரணன் உக்கிரன் ஆகிய பூதகணத் தலைவர்கள் நக்கீரரையடைந்து நீ முருகன் எழுந்தருளிய இத்தலத்திற் கொலைபுரிந்தமையால் தீவினை யையுடைய யாய்ை எனக்கூறி நக்கீசரது முதுகிற் புடைத்து அவரை மலைமுழையொன்றிற் சிறைப்படுத்தினர். நக்கீரர் தாம் அடைந்த துன்பத்திற்குரிய காரணத்தைச் சிந்தித்தார். முருகப்பெருமானைச் செந்தமிழ்ப் பனுவல்களாற் பாடிப் போற்ருமையால் நேர்ந்துன்ப மிதுவா மெனத் தெளிநது உலகமுவப். எனத்தொடங்கி மலைகிழவோனே யென முடியும் திருமுருகாற்றுப் படையினைப்பாடி முருகனை வழி பட்டு நோற்றிருந்தார். முருகன் அவரது கனவிலே தோன்றி , நீ என்னைக்கிழவோனே என அழைத்துள் ளாய் யான் கிழப்பருவமடைந்த நிலையில் நின் னை நோக்கிவரச் சிலநாளாகும். எனக் கூறி மறைந்தனர். அதுகண்டு திடுக்குற்று விழித்த நக்கீரர் என்றும் இளையாய் ' எனப் பாடிப் போற்றினர். அப்பாடலே க் கேட்டு மகிழ்ந்த முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் தாங்கிய வேற்படையால் மலை முழையைப் பிளந்து நக்கீரரைச் சிறையினின்றும் மீட்டுத்தனது முவா இளநலமாகிய தெய்வக்கோலத்தைக் காட்டித் திருவருள் புரிந்தான் என வரும் இக் கதை நிரப் பவழகிய தேசிகர் பாடிய திருப்பரங்கிரிப் புராணத்து நற்கீரச் சருக்கத்தில் விரித்துரைக்கப்பட்டுளது.