பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 623

இக்கதை சில வேறுபாடுகளுடன் திருவால் வாயுடை யார் திருவிளையாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடலிற் காணப்படினும் இக்கதை நிகழ்ச்சி பற்றிய செய்யுட்கள் சில ஏடுகளில் இல்லாமை யாலும் இவை முன் னும்பின்னுந் தொடர் பின் றிக் காணப் படுதலாலும் இது பிற்காலத் தொருவராற் சேர்க்கப்பட்ட தெனவே கருதவேண்டியுளது. இந்திரன் முடிமேல் வளை யெறிந்த திருவிளையாடலுக்கும் நக்கீரர் திருமுருகாற்றுப் படை பாடிய செவ்வியினை விளக்கப்புகுந்த இக்கதைக்கும் யாதோரியைபுமில்லாமையும் இக்கதைக்குரிய உஉ முதல் உஅ வரையுள்ள ஏழு செய்யுடகளையும் நீக்கிப்படித்த அளவில் இந்திரன் முடிமேல் வளை யெறிந்த திருவிளே யாடலாகிய கதை தொடர்புபெற விளங்குதலும் இவண் நோக்கத்தக்கனவாம்.

திருவாலவாய்ப் பெருமான் தருமியின் பொருட்டு நன்பாட்டுப் புலவளுகச் சங்கமேறித் தருமிக்குப் பொற் கிழி வாங்கித்தந்தருளினர் என்ற செய்தியினை த் திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புத்துார்த் திருத் தாண்ட கத்திற்குறிப்பிடுதலால் அச்செய்தி திருநாவுக்கரசர் கால மாகிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிலேயே நிலைபெற்று வழங்கிய பழைய வரலாறென்பது இனிது பெறப்படும். தருமிக்குப் பொற்கிழி தந்தருளிய இத் திருவிளையாடலில் இறைவனது செய்யுளுக்குக் குற்றங் கூறியவர் நக்கீர ரென்றும் சிவபெருமான் சடைமுடியும் நெற்றிக் கண்ணுங் காட்டி நக்கீரரை அச்சுறுத்தினனென்றும் நெற்றிக் கண் னழலால் வெதும்பிய நக்கீரர் உடல் முழுதும் நெருப்புக் கண் களைக் காட்டினலும் குற்றங்குற்றமேயென க் கூறிப் பொற்ருமரைத் தடாகத்தில் வீழ்ந்தனரென்றும் பின்பு சங்கடபுலவர்களது வேண்டு கோளால் அங்கெழுந்தருளிய இறைவனது அருள் நோக்கம் பெற்ற நிலையிற் கயிலை பாதி காளத்திபாதியந்தாதி முதலிய பிரபந்தங்களைப் பாடித் துதிதது இறைவனருளாற் கரையேறி யுய்ந்தனரென்றும் பெரும்பற்றப் புலியூர் நம்பியும் பாஞ்சோதி முனிவரும் தாம் பாடிய திருவிளே யாடற் புராணத்துக்கூறும் இக்கதை நிகழ்ச்சிகளுக்குக் கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டிற்கு முற்பட்டுத் தோன்றிய தமிழ் நூலகளில் எத்தகைய ஆதர வும் காணப்படவில்லை. இக்கதை நிகழ்ச்சிகளைப் பிற்காலத்