பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர்

றில் பதினுெராந்திருமுறையாசிரியருளொருவரும் திருவீங் கோய்மலையெழுபது என்னும் பிரபந்தத்தால் அத்திருத் தலத்திறைவரைப் போற்றியவருமாகிய நக்கீரதேவரை அத்திருக்கோயிலில் எழுந்தருளு வித்த செய்தி குறிக்கப் பட்டுள்ளது. மூன்ருங் குலோத்துங்க சோழனது 36ஆம் ஆட்சியாண்டில் இராஜராஜ வளநாட்டுமலை பூரீஜயங் கொண்ட சோழச் சதுர்வேதி ம ங் க ல த் து ப் பெருங்குறி மகாசபையார், உடையார் திருவீங்கோய் ஊருடையார் கோயிலில் எழுந்தருளுவித்த ஆளுடைய பிள்ளையார்க்கும் திருநாவுக்கரசு தேவர்க்கும் ஆலால சுந்தரப் பெருமானுக்கும் திருநற்கீர தேவர்க்கும் திருப்படி மாற்றுக்கும் விஞ்சநத்துக்கும் உடலாக (முதற் பொருளாக) நிலம் அளித்தமையே இக் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட சிறப்புடைய நிகழ்ச்சியாகும் இக் கல் வெட்டினைக் கூர்ந்து நோக்குங்கால் இதன்கண் குறிக்கப் பெற்ற திரு நற்கீர தேவரென்பார், பதினுெராந் திருமுறை யாசிரியருள் ஒருவரென்பதும் இவ்வாசிரியர் திருவீங்கோய் மலை யெழுபது என்னும் பிரபந்தத்தைப் பாடி இத் திருத் தலத்தைப் போற்றினமையால் இவரது திருவுருவம் திருக் கோயிலில் எழுந்தருளச் செய்யப்பட்டு வழிபடப் பெறுவ தாயிற்றென்பதும் நக்கீர தேவராகிய இவ் வாசிரியரைத் தேவார ஆசிரியர் மூவர்க்கும் பின்னக இதன்கண் குறித் திருத்தலால் இத் திருநற்கீத தேவரென்பார் தேவார ஆசிரியர் மூவர்க்குங் காலத்தாற் பிற்பட்டவரென்பதும் இனிது புலளுதல் காணலாம். திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் சுந்தரர் ஆகிய மூவர் திருவுருவங்களையும் எழுந்தருளுவித்து வழிபாடு நிகழ்த்தும் முறை சிவ பெருமானுக்குரிய எல்லாத் திருக்கோயில்களிலும் தவருது போற்றப்பெற்றுவரும் பொது நிகழ்ச்சியாகும். திருவீங் கோய்மலை யெழுபது பாடிய திரு நற்கீரதேவரை அவ்வூர்த் திருக்கோயிலில் எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிலமளித்த இச்செய்தி அவ்வூர்த் திருக்கோயிலுக்கே யுரிய சிறப்புடைய நிகழ்ச்சியாகும்.

நக்கீர தேவராகிய இவ்வாசிரியர் பிறந்த நாடு, ஊர், குலம், பெற்ற தாய் தந்தை இன்னர் என்பது முதலிய

  • செந்தமிழ், பதினேழாந்தொகுதி 313-ம் பக்கம்,