பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கீர தேவ தாயஞர் $34 1. கைலைபாதி காளத்திபாதி யந்தாதி

எல்லாம்வல்ல சிவபெருமான் வடதிசையிலுள்ள திருக்கயிலாய மலையில் அம்மையப்பளுக வீற்றிருந்து எவ்வுயி க்கும் அருள் சுரத்தல் போன்று, தென்றி ைசயி லுள்ள திருக்காளத்தி மலையிலும் மாதொருபாகளுக வீற்றிருந்து மன்னுயிர்க்கு அருள்சுரக்கின்ருன் என அப்பெருமானது அருமையில் எளிய அருளின் நீர்மையைப் புலப்படுத்துங் கருத்துடன் நக்கீரதேவர் அருளிய செந்தமிழ்ப் பனுவல் கயிலைபாதி காளத்திபாதியந்தாதி யாகும். இந் நூல் அந்தாதித் தொடையமைய நூறு வெண்பாக்களால் இயன்றுளது. இதன்கண் ஒற்றைப் படையெண்களிலமைந்த வெண்பாக்கள் ஐம்பதும் திருக் கயிலையைப் போற்றுவனவாகவும், இரட்டைப்படை யெண் களிலமைந்த வெண்பாக்கள் ஐம்பதும் திருக்காளத்தியைப் போற்றுவனவாகவும் அடுத் தடுத்து அமைந்திருத்தலால் இது கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி யெனப் பெயரெய்துவதாயிற்று.

திருக்காளத்தி யிறைவரைப் பரவிப் போற்றிய திருநாவுக்கரசர், தென் திசையிலுள்ள அத் திருக்காளத்தி மலையில் வீற்றிருந்தருளும் இறைவனைப் பணிந்த குறிப் பினுல் வடதிசையிலுள்ள திருக்கயிலையில் இறைவன் வீற்றிருந்தருளும் பெருந் திருக்கோலத்தையும் கண்டு வழிபட விரும்பி வடதிசை நோக்கிப் புறப்பட்டருளினர் என்பது வரலாறு.

சேனிலவு திருமலையில் திருப்பணியாயின செய்து தாணுவினை அம்மலைமேல் தாள் பணிந்த குறிப்பிளுல் பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங் கோலங் காணுமது காதலித்தார் கலைவாய்மைக் காவலனுர், எனவருஞ் சேக்கிழார் வாய்மொழியால் இச்செய்தி புலளுதல் காணலாம். திருக்காளத்தி மலையை வழிபட்ட திருநாவுக்கரசர் திருவுள்ளத்தே தென்றிசையிலுள்ள அம்மலையைப் போன்று வடதிசையில் திகழும் திருக்கயிலை மலை நினைவுக்கு வந்ததென்னும் இச்செய்தியினைக் கூர்ந்து நோக்குமிடத்து, வடதிசையில் திகழும் திருக்கயிலை மலையை யொத்த பெருஞ்சிறப்பு தென்றிசையில் விளங்கும் திருக்காளத்தி மலைக்கு உண்டென்பது திருநாவுக்கரசர் திருவுள்ளக் குறிப்பாதல் நன்குபெறப்படும். இக்குறிப்பினை,