பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் గ్రీక్షి

பண்புடையார்ப் பட்டுண் டுலகம், அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் ’

என்ற திருக்குறளையும் இதற்கு விரிவுரையாக அமைந்த உண்டாலம்ம விவ்வுலகம் .... தமக்கெனமுயலா நோன்ருட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்ற புறநானூற் றுச் செய்யுளையும் நினைவுபடுத்துவதாகும்.

இறைவன் சொல்லும் பொருளும் போலவும் உடலும் உயிரும் போலவும் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கு கின்ருனென்பதும் எனினும் மக்கள் தம் ஐம்புலன்களாற் பற்றி யுணர்தற்குரிய நிலையின்றி ஒன்றினுந் தோய்வின் றிப் புலனுணர்வுக்கு அப்பாற்பட்டுள்ளானென்பதும் ஆகிய உண்மையினை,

உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப்-புரையின் றிச் சென்றவா ருேங்குந் திருக்கயிலை யெம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து.' எனவும்,

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்ருலும் ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய்." எனவும் வருந் தொடர்களால் நக்கீரதேவர் விரித்துக் கூறியுள்ளார். ஒருபற்றுமற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங்கடந்த பொருளாகிய இறைவனை ,

உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலரெழுதரு

நாற்றம்போல் பற்றலாவதோன் நிலையிலாப் பரம்பொருள்

எனத் திருவாதவூரடிகள் உணர்ந்து போற்றுங் குறிப்பு இவண் ஒப்புநோக்கியுணரத்தக்கதாகும்.

இறைவனது பொருள் சேர்புகழை நாவாரப் பேசா திருப்பார் உலகத்தின் திலகமென விளங்கும் செல்வமுஞ் சிறப்புமுடையராயினும் அவரது பிறப்பு மிகவும் இழி வுடையதே. இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யடியார் களைப் போற்றி வழிபடும் இயல்பிலாதார் குடிப்பிறப்பு கல்வி செல்வம் முதலிய பிறநலங்களாற் சிறப்புற்று விளங்கினும் அன்னேர் பெரிதும் இழிவுடையவரே. இறைவனைப் போற் ருது வீணே பொழுது போக்குவாராகிய அவர்களும் மனிதப் பிறவியாலுளதாம் பயனையடைந்து சிறப்பெய்திய