பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636

பன்னிரு திருமுறை வரலாறு


வர் ஆவரோ? இறைவனைக் கைதொழுவார்க்கு மீண்டும் பிறவியில்லை. வஞ்சனையைச் செய்து ஐம்புல வேடர் பணித்த தீய வழிகளிற் சென்று இவ்வுடம்பினை நிலையுடைய தென எண்ணிக் களிப்புமிக்கு ஆடித்திரிதல் அறிவுடைமை யாகாது. இவ்வுடம்பு நிலையுடையதன்று. ஆதலால் தூயோனகிய இறைவனது பெரும்புகழைப் பயின்றேத்தி வழிபடுதலே அறிவு நூல்களைக் கற்ற தலைாய நற்பயணு கும். வானுேர்தம் சிந்தையாலும் அறிவருஞ் செல்வனுகிய இறைவன், தன்னடியார்களுக்கு முன்னின்று அருள்புரித லால் அருமையிலெனிய அழகளுகத் திகழ்கின்ருன். தன் னுெப்பாரில்லாத அவ்வொருவனே பிரமன், திருமால், அமரர்கோன் முதலிய பலராய்க் கலந்து நின்று இவ்வுல கத்தைப் படைத்துக் காத்து ஆண்டு எல்லாம் ஒடுங்குதற் குரிய பேருழிக் காலத்தே தானுெருவனுமேயாகி மீளவும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து இங்ங்னம் பலவேறு திருமேனிகளைத் தாங்கி அருள்புரிகின்ருன். அவ ைக் கைதொழுவோர்க்கு மீண்டும் பிறவியில்லை. அப்பெரு மானைக் கைதொழாதார் பல பிறவிகளிலும் பிறந்துழலுவ தன்றி அமைதியான பேரின்ப வாழ்வினை அடைதல் இல்லை. எல்லாப் பொருட்கும் சார்பாகிய செம்பொருளை யுணர்ந்து சார்ந்த மெய்யடியார்களை எத்தகைய இடர் களிலும் சிக்குருமற் காப்பனவும் தம்மையடைந்து அன்பு செய்தார்க்கு வீடுபேருகிய பேரின்பத்தை வழங்குவனவும் தம் உள்ளத்துள்ளே அன்புமீதுார நினைந்துபோற்று வார்முன் தோன்றித் துணைபுரிவனவும் காளத்தியிறைவ னுடைய திருவடிகளேயாகும். காலமறிந்து உயிரை உடம்பினின்றும் பிரிக்குந் தொழிலை மேற்கொண்ட கூற்று வளுர் ஊழால் நமக்கு வகுக்கப்பட்டுள்ள வாழ்நாளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்து அக்காலம் நேர்பட்ட அளவில் நம்மை வணக்கித் துன்பவலையுட்படுத்தற்கு எதிர் பார்த்து நிற்கின்ருர். அவர் வருதற்கு முன்னமே இறை வனைத் தொழுதுய்தல் வேண்டும். உயிர் உடம்பைவிட்டு நீங்கிய அளவில் ஊரார் அவ்வுடம்பினைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கஞ் செய்ய அவ்வுடம்பு தீயில் வேத லேக் கண்டிருந்தும் இறைவனை யேத்துதற்கு மனம் ஒருப்பட வில்லையே? இறைவனது திருப்பெயராகிய திருவைந் தெழுத்து வாயாற் சொல்லுமளவில் வானேரமிழ்தத்தை யொத்து அண்ணிப்பதாகிக் கொடிய பிறவி நோயைத்