பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 637

தீர்த்து இன்பஞ்செய்வதாகும். அருமறைப் பொருளாய்ச் சிறந்து விளங்குவது திருவைந்தெழுத்தே. இதனைப் பயிலுதலால் யாவராலும் காணுதற்கரிய இறைவனை அடைந்தின்புறு தற்கரிய பெருநெறி மிகவும் அணிமையதா மாதலின் திருவைந்தெழுத்தினைச் சேராமல் எப்பொழு தும் சொல்லுதல் வேண்டும். பெறுதற்கரிய மக்கட்பிறப் பினைப்பெற்ற மாந்தர்பலர் கொன்னே காலத்தைக் கழிக் கின் ருர்கள். அந்தோ இவர்கள் பிறருடைய மாயத்துட் பட்டு மயங்கினர்போலும். காளத்தி யிறைவர்க்கு அன் பில்ை நெருங்கித் தொண்டுபுரிந்த கண்ணப்ப நாயஞரது பேரன்பின் திறத்தை இன்னேர் கேட்டு உய்தியடைய மாட்டார்களா? அருச்சுனன் தன் உயிர்த்தோழனுகிய கண்ணபிராளுேடுஞ் சென்று கயிலையையடைந்து சிவ பெருமானைப் பணிந்து அப்பெருமான்யால் பாசுபதப் படையைப் பெற்றுப் பகைவரையழித்து வெற்றி பெற்ற திறத்தைப் பாரதக் கதையிலே கேட்டுத் தெரிந்துகொள் ளுங்கள். இறைவன் தன்னை மெய்ம்மையாக வழிபடுவோர் யாவராயினும் அவருடைய துன்பங்களே இம்மையே தீர்த்து அருள்புரிவன், சிவபெருமானே யாவர்க்கும் முழுமுதற் கடவுள். இவர் கடவுள் அவர் கடவுள் என்று சொல்லி இரு நிலைப்பட்டு ஐயுருமல் நீங்கள் விரும்பியதொரு தெய் வத்தை உள்ளத்தால் நினைந்து போற்றுவீராயின், காளத்தி யிறைவராகிய சிவபெருமானே அத்தெய்வமாக வந்து உங்கட்கு அருள்புரிவார். கழிந்தநாள் போகட்டும்; இனி மேல் எஞ்சியுள்ள நாட்களிலேனும் கயிலைப்பெருமானை நண்ணி வழிபடுதல் நமக்குச் சிறந்த பேரின்பத்தினை நல் குவதாகும். வாழ் நாள் மேலும் உள்ளன. வென்று கருதி நாம் உலக நுகர்ச்சியிலே அழுந்திக்கிடத்தல் தவமாகாது. நிலைபேறில்லாத இப்பொய்வாழ்வினைப் பொருளெனப் பேணுது கயிலைப் பெருமான இடைவிடாது நினைந்து வழி படுதல் அறிவின் பயனுகும். ஐம்புலன்களையும் வென்று காம முதலிய குற்றங்களை வேரறுத்து இறைவனது திருவருள் ஒன்றையே இடைவிடாது நினைத்திரேல் கயிலைப் பெருமா னுடைய கழலடைந்து இன் புறலாம் என நக்கீர தேவர் உலக மக்களை நோக்கியும் தம் உள்ளத்தை நோக்கியும் கூறும் அறிவுரைகள் திருக்குறள், தேவாரத்திருப்பதிகங் கள், திருவாசகம் முதலிய பண்டைப் பனுவல்களின் தெளி பொருளாகத் திகழ்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.